தலைக்கவசத்தை அணிய விழிப்புணர்வு

இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதன் அவசியம் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெருமளவில் நடத்தி வருகின்றனர். இது பொதுமக்களிடையே நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.

சென்னை அயனவரத்தை சேர்ந்த திரு.K.ஜனார்த்தனன் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது, தானும் தலைக்கவசம் அணிந்து கொண்டு தனது மூன்றறை வயது குழந்தை திரு.துஷார்ஹரி என்பவருக்கும்  சிறிய ஹெல்மெட் அணிவித்து இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். 

தானும் தலைக்கவசம் அணிந்து தனது சிறிய குழந்தைக்கும் தலைகவசம் அணிவித்து பிற வாகன ஓட்டிகளுக்கு ஒரு முன்மாதிரியாக நடந்து போக்குவரத்து விதிகளை மதித்து செயல்பட்ட திரு.K.ஜனார்த்தனன் என்பவரை பாராட்டும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.A.K.விசுவநாதன் I.P.S, அவர்கள் மற்றும் கூடுதல் காவல் ஆணையாளர் (போக்குவரத்து) திரு.A.அருண்,IPS அவர்கள் திரு.K.ஜனார்த்தனன் மற்றும் மூன்றறை வயது சிறுவன் திரு.துஷார்ஹரி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்தனர். 

திரு.K.ஜனார்த்தனன் மற்றும் மூன்றறை வயது சிறுவன் திரு.துஷார்ஹரி போன்று அணைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.