திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த சுகாதாரத் துறையை சார்ந்த 98 நபர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களை  மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 15.08.2020 அன்று வழங்கினார். திருச்சி ராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 15.08.2020 அன்று காலை 8.50 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து வண்ணப் பலூன்களை பறக்க விட்டார். இதனை தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக சுதந்திர தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் காலை 8.40 மணிக்கு காந்தி மார்க்கெட் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரி யாதை செலுத்தினார். தொடர்ந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட 10 தியாகிகளுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் வீடுகளுக்கே சென்று பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு களையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மத்திய மண்டலம் காவல்துறை தலைவர் ஆ.ஜெயராமன்.இ.கா.ப. மாநகர காவல் ஆணையர் து.லோகநாதன். இ.கா.ப. திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆணி விஜயா.இ.கா.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன். இ.கா.ப. திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் அல்லாட்டி பள்ளி பவன்குமார் ரெட்டி. இ.கா.ப. (சட்டம் மற்றும் ஒழுங்கு) திருச்சி சு.வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் ஆட்சியர் (பயிற்சி) சித்ராவிஜயன் இ.ஆ.ப. திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.விஸ்வநாதன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் (பொது)

பழனிதேவி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ.முகமது ரஃபி மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன் தாட்கோ மேலாளர் தியாகராஜன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா இணை இயக்குநர் (குடும்பநலம்) டாக்டர் லெட்சுமி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சுப்ரமணி துணை இயக்குநர்கள் டாக்டர்.பிரியதர்ஷினி (மருத்துவம் மற்றும் குடும்ப நலம்) டாக்டர்.சாந்தி (தொழுநோய்) டாக்டர்.சாவித்திரி (காசநோய்) மாநகராட்சி நகர்நல அலு வலர் டாக்டர் யாழினி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் மார்டின் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் டாக்டர் அரவிந்தன் அலுவலக மேலாளர் (குற்ற வியல்) சிவசுப்ரமணியம்பிள்ளை தனி வட்டாட்சியர் கூடுதல் வரவேற்பு சண்முகவேலன் திருச்சி ராப்பள்ளி வட்டாட்சியர்கள் முகுந்தன் (மேற்கு) ஸ்ரீதர் (ஸ்ரீரங்கம்) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.