திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற 15.08.2020 அன்று சுதந்திரதின விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற வுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணிபுhpந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்கள். சுதந்திர தினவிழா தொபானபான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்ரூபவ் சுகாதாரவசதி குடிநீர் வசதி செய்து கொடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். சுதந்திரதின விழா சிறப்புடன் நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதோடு ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து தனிநபர் தீயணைப்புத்துறை அலுவலர்கள் விழா நடைபெறும் இடத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும்
மேற்கொள்ள வேண்டும். காவல் துறையினர் பொதுப்பணித் துறையினர் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் விழா நடைபெறவுள்ள ஆயுதப்படை மைதானத்தை சீரமைத்து தயார் நிலை யில் வைத்திருக்க வேண்டும். சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். காவல் துறையினர் விழா நடைபெறும் மைதானத்தில் தகுந்த பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) பழனிதேவி மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன் பொதுப்பணித்துறை செயற்பொறிளார் (கட்டடம்) ஆர்.சிவக்குமார் உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.