திரு.முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்ளையும் சந்தித்த பிரமுகர்கள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 21.10.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை 26.9.2019 அன்று வியாழக் கிழமை, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறு வனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், பொதுச் செயலாளர் திரு.ளு.சு.தேவர், பொருளாளர் திரு.வி.டி.பாண்டியன், இணைப் பொதுச்செயலாளர் திரு.இரா. பிரபு, மாநில இளைஞர் அணிச் செயலாளர் திரு.பெரியதுரை, தென் சென்னை மாவட்டச் செயலாளர் திரு.வேங்கை சுரேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்தனர். அதற்கு, கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 21.10.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங் கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு. எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோரை தலைமைக் கழகத்தில் 26.9.2019 அன்று வியாழக் கிழமை, பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. மு.ஹ.முருகன்ஜி, தேனி மாவட்டச் செயலாளர் திரு. சூ.சிவச்சந்திரன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்களான மதுரை திரு. சு.ராஜாஜி, திரு.ளு.ஞ.ராமநாதன் மற்றும் திரு.ளு.ஞ.லட்சுமணன் ஆகியோர் நேரில்சந்தித்து, தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்தனர். அதற்கு, கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி மு.பழனிசாமி ஆகியோர் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.