நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்கள்

27 ஆகஸ்டு 2020 நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள், இரத்த தானம், மரக்கன் றுகள் நடுதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங் கினர். மதுரை அம்மன் சைவ உணவக வளாகத்தில் நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் தலைமையிலும், திருநெல் வேலியில் உதய குமார் தலைமையிலும், நாகர்கோவிலில் சதீஷ்ராஜா தலைமை யிலும் சென்னையில் சூரி நற்பணி இயக் கத்தின் சார்பாக ஆதீஸ்வரன் தலைமை யிலும் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மதிய உணவு வழங்கினர்.

நாகர்கோவிலில் சதீஷ்ராஜா தலைமையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர். பாண்டிச்சேரியில் முதியோர் இல்லத்தில் சதீஷ்ராஜா மதிய உணவும் வழங்கினார். தருமபுரி, கரூர் மாவட்டங் களில் நற்பணி இயக்கம் சார்பாக அரசு மருத்துவ மனை யில் இரத்த தான முகாம் மூலம் இரத்த தானம் வழங்கினர். கடலூர் தருமபுரி மாவட்ட ங்களில் நற்பணி இயக்கம் சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு மற்றும் புத்தாடைகள் வழங் கப்பட்டன. கிருஷ்ணகிரி ஓசூர் பகுதிகளில் நற்பணி இயக்கம் சார்பாக ஆதரவற்றோருக்கு இனிப்புகள் மதிய உணவு வழங்கப் பட்டன. மதுரை மற்றும் பாண்டிச்சேரியில் நற்பணி இயக்கம் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சனிடைசர் வழங்கப் பட்டன. நடிகர் சூரி அவர்களுடைய சகோதரர் லட்சுமணனுக்கும் ஆகஸ்டு 27 பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது