நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ரோட்டரி சங்கத்துடன் சேர்ந்து வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

 

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில்..நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என முடிவு செய்து…நண்பர்களின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் ..தொடர்ந்து உதவி வருகின்றோம். 6.8.2020 அன்று மதுரையில் 5 வது நிகழ்ச்சியாக..தூய்மைப் பணியாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், சவரத்தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை உடுமலைப்பேட்டை அக்ஷதா அறக்கட்டளை Rotary Udumalpet Galaxy Rotary Club of Pondichery. திண்டுக்கல் சமதர்மப் பேரவை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு அச்சக பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநிலப் பொதுச் செயலாளர் இரா.கணேசன் மதுரை இராஜாஜி அரசு மருத்துவ மனை ECG Operotor இரா. விஜயராம் மதுரை சமூக ஆர்வலர் M.ஜாஹீர் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். திண்டுக்கல் சென்னையில் அடுத்த நிகழ்வுகள் நடைபெற உள்ளது.