பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1.மெரினா பகுதியில் வாலிபரை கத்தியால் தாக்கி தங்கச்செயின் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற வழக்கில் 3 குற்றவாளிகள் ½ மணி நேரத்தில் கைது. சென்னை, அயனாவரம், செட்டி கார்டன், எண்.24/1 என்ற முகவரியில் ஜெரின்ஜோசப், வ/22, த/பெ.ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஜெரின் ஜோசப் 11.09.2019 அன்று இரவு தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். பின்னர் ஜெரின் ஜோசப் 12.09.2019 அன்று அதிகாலை சுமார் 1.45 மணியளவில் தனது நண்பர்களான இமானுவேல், பாபிகுரியன், ராஜா ஆகியோருடன் சேர்ந்து மெரினா கடற் கரைக்கு சென்று, சுபாஷ் சந்திரபோஸ் சிலை பின்புறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 நபர்கள் மேற்படி ஜெரின் ஜோசப் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி2 செல் போன்கள் மற்றும் 1 சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தகராறு செய்துள்ளனர். இதனை ஜெரின் ஜோசப் தட்டிக்கேட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் மேற்படி ஜெரின் ஜோசப்பை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். உடனே இது குறித்து ஜெரின் ஜோசப்பின் நண்பர்கள் கண்ணகி சிலை அருகில் இரவு ரோந்து பணியிலிருந்த D-4 ஜாம்பஜார் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.M.முனியசாமி, D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.V.நந்தகுமார், குற்றப்பிரிவு தலைமைக்காவலர் திரு.S.ரூபேந்தர்குமார், D-4 ஜாம்பஜார் L&O முதல் நிலைக்காவலர் G.வெங்கடேசன் (மு.நி.கா 31826) ஆயுதப்படை காவலர் திரு.கோபிநாத் (கா.51004) ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே D-4 ஜாம்பஜார் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் K.M.முனியசாமி தலைமையிலான மேற்படி போலீசார் விரைந்து செயல்பட்டு , புகார்தாரர்கள் கூறிய அடையாளங்களை வைத்து மெரினா கடற்கரை பகுதியில் தேடி மேற்படி வழிப்பறி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 1.விஜய், வ/22, த/பெ.சரவணன், எண்.146, திருவல்லிக்கேணி 2.தேவா, வ/20, /பெ.சேகர், திருவல்லிக்கேணி 3.பார்த்திபன், வ/20, த/பெ.குரு, எண்.37, கனக துர்கா நகர், சிவன் கோயில் சாலை, திரு வேற்காடு ஆகிய மூன்று நபர்களை தகவல் கிடைத்த ½ மணி நேரத்திற்குள்ளே கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 சவரன் தங்கச்செயின் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் டி-5 மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மெரினா காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

2. பட்டினப்பாக்கம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த நபர் கைது, 6 கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல். மைலாப்பூர் துணை ஆணையாளர் தனிப்படையைச்சேர்ந்த உதவி ஆய்வாளர் திரு.D.அகஸ்டின், (E-1 மைலாப்பூர் காவல் நிலையம்) தலைமைக்காவலர் திரு. M.லோகநாதன் (த.கா.15822) ((D-5 மெரினா காவல் நிலையம்) ஆகியோர் நேற்று (11.092019) மாலை சுமார் 4.30 மணியளவில் கண்காணிப்பு பணியிலிருந்த போது உதவி ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் E-5 பட்டினப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீனிவாசபுரம், 136வது பிளாக் அருகில் உள்ள ஒருவீட்டை கண்காணித்த போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன் பேரில் மேற்படி வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து E-5 பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். E-5 பட்டினபாக்கம் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் கீரைமணி (எ) மணிகண்டன், வ/36, த/பெ. கமலக்கண்ணன், எண்.132, 2 அடுக்குமாடி, செம்மஞ்சேரி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 6 கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட கீரைமணி (எ) மணிகண்டன் என்பவர் மீது 1 கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளதும், இவர் ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கீரை மணி (எ) மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

3. கஞ்சா விற்பனை செய்த நபர் கைது 4 கிலோ கஞ்சா பறிமுதல். D-2 அண்ணாசாலை காவல் நிலைய முதல் நிலைக்காவலர்கள் திரு.R.சின்னதம்பி (மு.நி.கா.28756) திரு.K.பன்னீர்செல்வம் (மு.நி.கா.31080) மற்றும் இரண்டாம் நிலைக்காவலர் திரு.K.விஜயகுமார் (கா.37991) ஆகியோர் கடந்த 10.09.2019 அன்று இரவு 11.00 மணியளவில் , உட்லண்ட்ஸ் திரையரங்க பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் தரமணியைச்சேர்ந்த சிங்கராஜ்
என்பவரிடம் கஞ்சாவை வாங்கி வந்ததாக தகவல் தெரிவித்ததன் பேரில் பிடிபட்ட மூவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபர்கள் மூவர் மீதும் டி-2 அண்ணாசாலை போலீசார் 75 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பிடிபட்ட நபர்கள் அளித்த தகவலின் பேரில் டி-2 அண்ணாசாலை போலீசார் விசாரணை செய்து மேற்படி நபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சிங்கராஜ், வ/32, த/பெ.கரந்தமலை, ஶ்ரீராம்நகர், முதல் தெரு, தரமணி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சிங்கராஜின் சொந்த ஊர் மதுரை என்பதும், அவர் மதுரையிலிருந்த கஞ்சா வாங்கி வந்து இங்கு சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. குற்றவாளி சிங்கராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

4. மீன்பிடி துறைமுகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது. 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 1 கத்தி பறிமுதல். N-4 மீன்பிடிதுறைமுகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.L.ராஜசேகர், தலைமைக் காவலர்கள் திரு.S.M.கருத்தோவியன் (தா.கா.35959), R.பாஸ்கர் (த.கா.25840) மற்றும் முதல் நிலைக்காவலர் திரு. S.மணிகண்டன் (மு.நி.கா.30850) ஆகியோர் 11.09.2019 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் கண்காணிப்பு பணியிலிருந்த போது உதவி
ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் என்-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் கண்காணித்த போது அங்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகிய இருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் இரண்டு நபர்களையும் கைது செய்து
என்-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். என்-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.மாலதி, வ/34, க/பெ. குணசேகரன், எண்.2, வ.உ.சி நகர், 7வது குறுக்கு தெரு, தண்டையார்பேட்டை 2.உலகநாதன், வ/25, த/பெ.ரவி, எண்.209, திடீர்நகர், 2வது தெரு, புதுவண்ணாரப்பேட்டை என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப் பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட உலகநாதன் மீது 4 அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 12.09.2019 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.