“தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கிடும் பத்திரிகை மற்றும் ஊடகத்த்துறையில் பணிபுரியும் செய்தியாளர்கள் அப்பணியின் போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ 10 லட்சமாக உயர்த்தி” வழங்குவதற்கான அரசாணை இன்று வெளியிட்டதற்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை நிருபர்கள் சங்கம் (Madras Reporters Guild) நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இந்த அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது மேலும் சென்னை நிருபர்கள் சங்கம் வேண்டுகோளின்படி அரசு அங்கீகார அட்டை பெற்ற செய்தியாளர்களின் குடும்பத்தினர்கள் தவிர இதர பத்திரிகையாளர்களின்
குடும்பத்திற்கும் இந்த உதவி தொகை வழங்கப்படும் என்ற முடிவை எடுத்து அரசாணையில் அவர்களையும் சேர்த்ததற்காக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
குடும்பத்திற்கும் இந்த உதவி தொகை வழங்கப்படும் என்ற முடிவை எடுத்து அரசாணையில் அவர்களையும் சேர்த்ததற்காக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் சென்னை நிருபர்கள் சங்கம் வேண்டுகோளின்படி அரசு அங்கீகார அட்டை பெற்ற செய்தியாளர்களின் குடும்பத்தினர்கள் தவிர, செய்தியாளர் அட்டை மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்ற செய்தியாளர்களின் குடும்பங்களுக்கும் இந்த உதவி தொகை வழங்கப்படும் என்ற முடிவை எடுத்து அரசாணையில் அவர்களையும் சேர்த்ததற்காக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சென்னை நிருபர்கள் சங்கம்: Madras Reporters Guild: ஆர். ரங்கராஜ், தலைவர்.