புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப 12.08.2020 அன்று மாலை புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதான வளாகத்தில், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆவின் நிறுவன நிர்வாக இயக்குநர் M.வள்ளலார், இ.ஆ.ப, கூடுதல் ஆணையாளர்கள் அமல்ராஜ், இ.கா.ப, (தலைமையிடம்), R.தினகரன், இ.கா.ப (தெற்கு), N.கண்ணன், இ.கா.ப (போக்குவரத்து) இணை ஆணையாளர்கள் R.சுதாகர், இ.கா.ப (கிழக்கு மண்டலம்) மல்லிகா, இ.கா.ப (தலைமையிடம்) S.லட்சுமி, இ.கா.ப (போக்குவரத்து தெற்கு) துணை ஆணையாளர்கள் R.திருநாவுக்கரசு, இ.கா.ப (நுண்ணறிவுப்பிரிவு) தீபாசத்யன் (மத்தியகுற்றப்பிரிவு-2) விமலா, (தலைமையிடம்) சௌந்தர்ராஜன், (ஆயுதப்படை-1) R.ரவிச்சந்திரன், (ஆயுதப்படை-2), S.கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.