புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சமுதாய நல க்கூடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சமுதாய நல கூடத்தை 11.08.2020 அன்று காலை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் ஆயுதப் படை அலுவலகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஆலந்தூர், எம்.கே. என் ரோட்டில் உள்ள காவலர் குடியிருப்பை பார்வையிட்டு காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர்கள் அமல்ராஜ், (தலைமையிடம்), R.தினகரன், (தெற்கு), கிழக்கு மண்டல இணை ஆணையாளர் R.சுதாகர், (பொறுப்பு தெற்கு) துணை ஆணையாளர்கள் விமலா, (தலைமையிடம்) K.பிரபாகர் (புனித தோமையர் மலை காவல் மாவட்டம்) பெரோஷ் கான் அப்துல்லா, (நிர்வாகம்) சௌந்தர்ராஜன், (ஆயுதப்படை-1) R.ரவிச்சந்திரன், (ஆயுதப்படை-2) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.