போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு

தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 27.07.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக இடைவெளியினை கடை பிடிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளதால் கொரோனா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்திட மத்திய மாநில அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தேனி மாவட் டத்தில் கொரேனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திடும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டம் முழுவதும் கண் காணிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் சமூக இடைவெளியினை சரிவர கடைபிடித்து நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேனி மாவட்டத்தின் தலைமை பகுதியான தேனி பகுதியில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காகவும் மற்றும் வியாபார ரீதியாகவும் வருகை புரிகின்றனர். அதில் சமூக இடைவெளியினை சரிவர கடைபிடிப்பதற்கு ஏதுவாகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் போக்குவரத்தை கூடுதலாக சீரமைப்புகள் செய்வதற்காகவும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்களின் இடங்களை தேர்வு செய்து பொதுமக்கள் அதனை முறையாக பின்பற்றுவதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் பெரியகுளம் சாலை வழியாக வரும் வாகனங்கள் கிழக்கு மற்றும் மேற்கு சந்தை வளாகங்களில் நிறுத்தம் செய்யவும் கம்பம் சாலை வழியாக வரும் வாகனங்கள் பழைய பேருந்து நிலையம் முன்பு நிறத்தம் செய்யவும் மதுரை சாலை வழியாக வரும் வாகனங்கள பகவதியம்மன் கோவில் தெருவிற்கு செல்லும் வாகனங்கள் மதுரை ரோடு நெடுஞ்சாலை துறை பயணியர் விடுதி முன்பு மற்றும் எதிர்புறம் நிறுத்தம் செய்யவும் சுப்பன் தெருவிற்கு செல்லும் வாகனங்கள் திட்டச்சாலை அருகில் உள்ள காலியிடப்பகுதியில் நிறுத்தம் செய்யவும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர சரக்கு வாகனங்களின் ஏற்றுமதி இறக்கு மதிக்கான நேரங்களை நிர்ணயித்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்க்கண்ட நடவடிக்கைகள் தொடர்பாக இன்றைய தினம் தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோய் தொற்றினை கட்டுப்படுத்திடும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு வணிகர்ளும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எஸ்.கவிதா காவல் துணை கண்காணிப்பாளர்கள் முத்துராஜ் முத்துக்குமார் தேனி நகராட்சி ஆணையர் நாகராஜ் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.