போதைப்பொருள் தடுத்தல் பணியில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ஐஸ் அவுஸ் பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது. போதை பொருட்கள் பறிமுதல். சென்னை பெருநகரில் போதை பொருட்கள் வைத்திருப் பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் G.K.வெங்கட்குமார், மயிலாப்பூர் துணை ஆணையாளர் தனிப்படை உதவி ஆய்வாளர் K.இளையராஜா, அருண்குமார், தலைமைக் காவலர்கள் C.ராமமூர்த்தி, (த.கா. 25978), R.ராம்குமார் (த.கா.26626), K.சுகுமார் (த.கா.26611), முதல்நிலைக் காவலர்கள் R.தியாக ராஜன் (மு.நி.கா.28020), V.திருநாவுக்கரசு (மு.நி.கா.28570), T.சங்கர் தினேஷ் (மு.நி.கா.39337), ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 31.8.2020 அன்று இரவு அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின்பேரில், டாக்டர் பெசன்ட் ரோடு, வி.ஆர்.பிள்ளை தெரு என்ற இடத்தில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு 3 பேர் சட்ட விரோதமாக போதை பொருட்கள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி இடத்தில் போதை பொருட்கள் விற்ற 1.முகமது அனிஸ், வ/30, த/பெ.நாகூர் கனி, எண்.20, அருணாச்சலம் தெரு, சேப்பாக்கம், சென்னை, 2.ஷேக் முகமது மதார், வ/27, த/பெ.சாகுல் அமீது, எண்.178/116, எண்.4ஏ, டாக்டர் பெசன்ட் சந்து, ராயப்பேட்டை , 3.முகமது சமீர் அகமது, வ/20, த/பெ.முகமது முனீர், எண்.25/12, கஜினி பேகம் தெரு, ராயப் பேட்டை, சென்னை ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து LSD Stamp– 83, MDMA, CHARAS, Methapitamine, Catamine ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நுங்கம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 பேர் கைது. 10 கிலோ கஞ்சா, 1 கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். தியாகராயநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் P.விஜயன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் P.B. தீர்த்த கிரி, V.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் வேங்கடப்பன் (த.கா.27369), வெற்றிவேலன் (த.கா.35314), பாலகிருஷ்ணன் (த.கா.24050), J.முரளி (த.கா.20322) முதல்நிலைக் காவலர் தர்மேஸ் வரர் (மு.நி.கா.28655), ஊர்க்காவல் படை காவலர் சத்யகுமார் (HG3717) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் 01.09.2020 அன்று இரவு F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து கஞ்சா பதுக்கி வைத்திருந்த 1.முகமது அசன், வ/26, த/பெ.எம்.எம்ஜீடி, என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் முகமது அசன் அளித்த தகவலின் பேரில் 2.திவான்ஜி, வ/25, த/பெ.பவன்குமார், எண்.1001, பரிதா பாத், அரியானா 3.அபிலாஷ், வ/23, த/பெ.வெங்கட்ராஜி, மரிப்பொடி கிராமம், குண்டூர் மாவ ட்டம், ஆந்திர மாநிலம் .சாய்கிருஷ்ணா, வ/23, த/பெ.வெங்கடேஷ்வரலு, கொற்றவரி தெரு, குண்டூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம் 5.மோஜேஷ், வ/21, த/பெ.அங்கம் சீனிவாசராவ், பபட்லா மண்டல் குண்டூர் மாவட்டம் 6.ஷேக் நூர் அகமது, வ/21, த/பெ.மகபுசுபானி, பபட்லா மண்டல், குண்டூர், ஆந்திரா மாநிலம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, 1 கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 6 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

தரமணி பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 நபர்கள் கைது. 16.5 கிலோ கஞ்சா, 3 இருசக்கர வாகனம் மற்றும் ரூ.3000/- பறிமுதல் இதன் தொடர்ச்சியாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் G.வெங்கடேசன், உதவி ஆய்வாளர் S.சங்கர், தலைமைக் காவலர்கள் H.பாலாஜி (த.கா.35230), S.சேகர் (த.கா.17899), K.ஜெயராமன் (த.கா.26163),  .முத்து ராமன் (த.கா.25438), முதல்நிலைக் காவலர்கள் M.சங்கர் (மு.நி.கா.29514) மற்றும் A.அன்பழகன் (மு.நி.கா.32724) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் 31.8.2020 அன்று மாலை J-13 தரமணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரங்கனல் தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்த போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததன்பேரில் மேற்படி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 1.சேகர் (எ) சிட்டிசேகர், வ/55, த/பெ.தாஸ், அரங்கநல் தெரு, தரமணி 2.தேவா, வ/30, த/பெ.சிட்டி சேகர், எண். 15, கனால் பேங்க் ரோடு, மாட்டாங்குப்பம் 3.அஜித்குமார், வ/26, த/பெ.ஏழுமலை, திருவல்லிக் கேணி 4.அரவிந்த், வ/25, த/பெ.கௌதம், எண்.31, ராமநாதன் தெரு, தி.நகர் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 16.5 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ.3000/- மற்றும் 3 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக பணி புரிந்து குற்றவாளிகளை கைது செய்த மேற்படி காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப 03.9.2020 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.