மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டிஜிட்டல் கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.

ஜூலை 14, 2020. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ டிஜிட்டல் கல்வி குறித்த ”பிரக்யாட்டா” வழிகாட்டுதல்களை புதுடில்லியில் காணொளிக் காட்சி மூலம் இன்று வெளியிட்டார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே அவர்களும் இணையம் வாயிலாக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, கோவிட்-19 தொற்றுநோய் பள்ளிகளை மூடுவதற்கு வழி வகுத்ததுடன், பள்ளிகளில் பயிலும் நாட்டின் 240 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளைப் பாதித்துள்ளது. இந்தப்  பள்ளி மூடல்கள் நீட்டித்திருப்பது கற்றல் இழப்பை ஏற்படுத்தக்கூடும். தொற்றுநோயின் தாக்கத்தைத் தணிக்க, பள்ளிகள்  கற்பித்தல் மற்றும் கற்றலில் இதுவரை கடைபிடித்த வழி முறையை மறு வடிவமைப்பது மட்டுமல்லாமல், பள்ளியில்  வழங்கப்படும் கல்வி போல, வீட்டிலேயே தரமான கல்வியை வழங்குவதற்கான பொருத்தமான முறையை
அறிமுகப்படுத்த வேண்டும்.என்று போக்ரியால் கூறினார்.

ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு இணையம் / கலப்பு / டிஜிட்டல் கல்வியை  மையமாகக் கொண்டு, கற்றவர்களின் பார்வையில் இருந்து ”பிரக்யாட்டா” வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன  என்று அமைச்சர் தெரிவித்தார். டிஜிட்டல் / இணைய கல்வி குறித்த இந்த வழிகாட்டுதல்கள் கல்வியின் தரத்தை  மேம்படுத்துவதற்காகவும், இணையக் கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்காகவுமான ஒரு வரைபடம் அல்லது
குறிப்புகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார். பள்ளித் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியக்  கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பயனாளி களுக்கு இந்த வழிகாட்டுதல்கள்  பொருத்தமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த வழிகாட்டுதல்கள் தேசிய  கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் மாற்றுக் கல்வி ஆண்டு திட்டத்தை, டிஜிட்டல் சாதனங்களுக்கான அணுகலைக் கொண்ட கற்றவர்கள் மற்றும் குறைந்த அல்லது அணுகல் இல்லாத கற்பவர்கள். இரு தரப்பினரும்  பயன்படுத்துவதை வலியுறுத்துகின்றன.

PRAGYATA வழிகாட்டுதல்களில் இணையம் / டிஜிட்டல் வழி கற்றலில் எட்டு படிகள் உள்ளன, அதாவது திட்டம்- விமர்சனம்- ஏற்பாடு- வழிகாட்டி- யாக் (பேச்சு) – பாடப்பணி- கண்காணித்தல்- பாராட்டு. இந்தப் படிகள்  டிஜிட்டல் கல்வியின் திட்டமிடலுக்கும், செயல்படுத்தலுக்கும் படிப்படியாக எடுத்துக்காட்டுகளுடன் வழிகாட்டுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பேசிய தோத்ரே, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை உறுதி செய்வதற்காக  மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ”பிரக்யாட்டா” வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார். மேலும்,
தொற்று நோய்களின் போது இணைய வழிக் கல்வி நிறைய இடைவெளிகளை நிரப்பியுள்ளது, ஆனால் மாணவர்களுக்கு  கல்வி கற்பதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றார்.  இந்த வழிகாட்டுதல்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தலைவர்கள் மற்றும் பிற பயனாளிகளுக்கு இணையப்
பாதுகாப்பு  நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாதுகாப்பாகவும் பத்திரமாகவும்  இணைய வழிக் கற்றல் சூழலை வழங்கும் ”பிரக்யாட்டா” வழிகாட்டுதல்களை வெளிக்கொணர அமைச்சகம்  மேற்கொண்ட முயற்சிகளையும் தோத்ரே பாராட்டினார். இந்த வழிகாட்டுதல்களில், நிர்வாகிகள், பள்ளித் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான பரிந்துரைகள் பின்வரும் பகுதிகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன
——————————————————-