மறுதேர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு 27.07.2020 அன்று மறுதேர்வு நடத்தப்பட்ட தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2020-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளிகளுக்கான அரசு பொதுத் தேர்வு 02.03.2020 அன்று தொடங்கி 24.03.2020 வரை நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 6525 மாணவர்களும் 7506 மாணவிகளும் என மொத்தம் 14031 மாணாக்கர்கள் தேர்வு எழுதினார் கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 24.03.2020 அன்று நடத்தப் பட்ட வேதியியல் மற்றும் கணக்கு பதிவியியல் தேர்வுகளை சில மாணவர்கள் எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இம்மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்றைய 27.07.2020 அன்று இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்பேன்ட் ஜீஸஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட மறுதேர்வு நடவடிக் கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இராம நாதபுரம் மாவட்டத்தில் வேதியியல் பாடத்தினை 3 தேர்வர்களும் கணக்கு பதிவியியல் பாடத்தினை 14 தேர்வர்களும் என மொத்தம் 17 தேர்வர்கள் மறுதேர்வு எழுதுகின்றனர்.

இதில் 13 தனித்தேர்வர்களும் 4 பள்ளி மாணவர்களும் அடங்குவர். கொரோனா வைரஸ் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வர்கள் சிரமப்படாத வகையில் அவர்களது இருப்பிடங் களுக்கு அருகாமையிலேயே தேர்வு எழுதிட ஏதுவாக 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெர்மல் ஸ்கேனர் மூலமாக தேர்வு எழுதுவோர் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கைகளை சுத்தமாக கழுவி பராமரித்திட கிருமி நாசினி திரவம் மற்றும் குடிநீர் வசதி கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்.அ.புகழேந்தி மாவட்ட கல்வி அலுவலர் கோ. முத்துச்சாமி வட்டாட்சியர் வி.முருகவேல் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.