மழைநீரால் சூழப்பட்ட இடங்களை ஆட்சியர் பார்வையிட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி சடைமுனியன் வலசை கிராமம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் தொடர்மழை காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும் மழையினால் சேதமடைந்த வீடுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் 07.12.2019 அன்று நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாட்களாக அதிக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகம் முன்னெச் சரிக்கை செயல்பட்டு மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களையும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. தொடர்ந்து மழைநீர் வடிந்திடவும் நிலத்தடி நீர் உயர்ந்திடவும் விவசாய பெருமக்கள் மழை நீரை பயன்படுத்திடும் வண்ணம் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளுக்கு அருகா மையில் உள்ள கண்மாய் குளம் குட்டைகளில் மழைநீரை நிரப்பிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஏர்வாடி ஊராட்சி சடை முனியன் வலசை கிராமத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகள் வீடுகளையும் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கனமழை காரணமாக சுவர் விழுந்து சேதமடைந்த வீட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணி களை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப் படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். மேலும் கனமழை காரணமாக ஏற் படும் எத்தகைய இயற்கை இடர்பாடுகளையும் எதிர்கொள்ளும் விதமாக அரசுத் துறை அலுவலர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றிட தயார் நிலையில் இருந்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது வட்டாட்சியர்கள் திரு.பி.முத்துக்குமார் (கடலாடி) திரு.பி. வீரராஜ்  (கீழக்கரை) வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.அன்புக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.