மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

பாஜக மத்திய அரசு, வரி விதிப்பு முறைகளை சீரமைக்கிறோம் என்கிற பெயரில், ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை 2017 ஜூலை முதல் தேதியிலிருந்து அமலாக்கி வரு கிறது. இந்தப் புதிய வரிவிதிப்பு முறையால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் தமிழ் நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது ஜி.எஸ்.டி. வரிமுறையால், மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ஈடுகட்ட 2017 முதல் 2022 வரையிலும் 5 ஆண்டு காலத்திற்கு இழப்பீடு தருவதாக மத்திய அரசு உறுதியளித்து, உடன்படிக்கை செய்து கொண்டது. ஆனால், மத்திய அரசும், நிதித்துறையும் மாநிலங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மதிக்காமல் அத்துமீறி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாநிலங்களில் நிலவி வந்த நிதி நெருக்கடி மேலும் ஆழப்பட்டு, மீள வழியின்றி சிக்கித் தவிக்கின்றன. கொரோனா நோய் பேரிடர் காலத்தில் மாநிலங்களுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு தனது கடமைப் பொறுப்பை கை கழுவி விட்டது. ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூபாய் 12 ஆயிரத்து 258 கோடிக்கு மேல் மத்திய அரசு பாக்கி தர வேண்டும். இது குறித்து அண்மையில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கேட்டபோது. மத்திய நிதியமைச்சர் (1) ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது (2) பொதுக் கடன் சந்தையில் நிதி திரட்டிக்கொள்ளுங்கள் எனக் கூறி, தனது சட்டபூர்வ கடமைகளை சோப்புப் போட்டு கை கழுவி கொண்டார். கடுமையான நிதிச் சுமையால், கழுந்து முறிந்து, கடனில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டை மேலும் கடன்கார னாக்கி, மீள முடியாதா கொத்தடிமை ஆக்கும் மத்திய அரசின் வஞ்சகச் செயலை இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஜி.எஸ்.டி. இழப்பீ ட்டு பாக்கித் தொகை உட்பட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய அனைத்து நிதி களையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது.