மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 30.07.2020 அன்று நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சிறப்பு முகாமை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் கொரோனா நிவாரண உதவித் தொகையாக ரூ.1000 ரொக்கத் தொகையாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் 28937 மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இராமநாதபுரம் மாவட் டத்தில் ஜுன் மாதத்தில் தொடங்கி இதுவரை 17896 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகையாக ரூ,1000 மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய்துறை இணைந்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் வாயிலாக அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிவாரண உதவித் தொகை பெற இயலாதவர்களுக்கு வருவாய் வட்டங்கள் வாரி யாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் மாவட்டத்தில் இதுவரை 30404 நபர்களுக்கு கொரோனா தொற்று பாpசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 3169 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 2410 நபர்கள் பு+ரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். 699 நபர்கள் (யுஉவiஎந ஊயளநள) தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதா என்பதை கண்காணிப்பதற்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப் படுகின்றன. இம்முகாம்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி பாpசோதனை செய்யப்பட்டு மல்டி வைட்டமின் மற்றும் சிங்க் சல்பேட் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இப்பகுதி களில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை தவிர்ப்பதற்கு உப்பு கலந்த நீரால் வாய் சுத்தம் செய்தல் ஆவி பிடித்தல் போன்று அவரவர் வீடுகளிலேயே கடைபிடிக்கக்கூடிய எளிய நடை முறைகள் குறித்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்திட சத்தான உணவு வகைகள் பழங்கள் பழச்சாறுகள் உட்கொள்வது குறித்தும் நோய் எதிர்ப்பு சக்தி உடைய மஞ்சள் மிளகு இஞ்சி பூண்டு ஆகியவற்றை அதிகப்படியாக உணவில் சேர்த்துக் கொள்வது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்து ழைப்பு வழங்கிட வேண்டும். குறிப்பாக தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் சமூக இடை வெளியை கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சிறப்பு முகாமில் 23 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை ரூ.1000 கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கடலாடி ஊராட்சி ஒன்றி யம் கருங்குளம் ஊராட்சியில் காய்ச்சல் அறிகுறி பரிசோதனை செய்யும் களப்பணியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் உரையாற்றி அறிவுரை வழங்கினார். தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதி யான சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட இருவேலி பகுதியில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடலாடி அரசு மருத்துவமனை சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு நோpல் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வுகளின் போது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெ.செந்தில்குமாரி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.பி.இந்திரா, வட்டாட்சியர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புக்கண்ணன் பாண்டி உட்பட அரசு அலுவலர்கள், உடனிருந்தனர்.