மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணச் சலுகை அட்டையினை டிசம்பர் – 2020 வரையில் புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு.இ.ஆ.ப தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பார்வையற்றோர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக 2019-2020ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட பேருந்து பயண சலுகை அட்டையினை கோவிட்-19 முன்னெச்சாp க்கை நடவடிக்கைக்காக 2020 ஆகஸ்ட் வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பயணச் சலுகை அட்டையினை மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி 31.12.2020 வரை யில் புதுப்பிக்காமல் பழைய பயணச் சலுகை அட்டையினை பேருந்துகளில் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம் இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு.இ.ஆ.ப. தெரிவித்துள் ளார்.