முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. தண்ணிர் திறந்து விட்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் முக்கொம்பு மேலணை அணைக்கட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட புள்ளம்பாடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணிர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 18.08.2020 அன்று முக்கொம்பு மேலணை வாத்தலையிலி ருந்து தண்ணீரை திறந்து விட்டார். புள்ளம்பாடி வாய்க்காலில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் வட்டம் வாத்தலையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் 18.08.2020 முதல் 31.12.2020 வரை தொடர்ந்து 136 நாட்களுக்கு தண்ணிர் திறந்து விடப் படும். திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடி வாய்க்கால் மூலமாக 22114 ஏக்கர் நிலங் கள் பாசன வசதி பெறும். இதில் நேரடியாக 8831 ஏக்கரும் ஏhp குளங்கள் மூலமாக 13283 ஏக்கரும் பாசன வசதி பெறும். இத்தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 3 ஏரி யும் அரியலூர் மாவட்டத்தில் 25 ஏரியும் பாசன வசதி பெறும். வாத்தலையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுக்கிரன் ஏரி வரை 100 கி.மீ தூரத்திற்கு தண்ணீர் சென்று பாசன வசதி பெறு கிறது. முன்னதாக முக்கொம்பு மேலணையில் புதிய மேலணை கட்டுமானப் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியின் போது பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்புக் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் உதவி செயற் பொறியாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
—————————————————