முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்த பிரமுகர்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப் பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில்  26.9.2019 – வியாழக் கிழமை, அன்று 21.10.2019 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, காணை ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. ஆ.சு. முத்தமிழ்செல்வன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைத் துறை மற்றும் கனிம வளத் துறை அமைச்சருமான திரு. ஊ.ஏந. சண்முகம்அவர்களும் உடன் இருந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப் பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் 26.9.2019 – வியாழக்கிழமை அன்று, 21.10.2019 அன்று நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்
தேர்தலில் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் திரு. ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் திருமதி ஏ.ஆ. ராஜலெட்சுமி, திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. தச்சை சூ. கணேசராஜா, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. மு.சு.ஞ. பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.