முழு ஊரடங்கின்போது குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும் – இரா.முத்தரசன்

தலைநகர் சென்னையில் கொரானா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர எல்லை முழுவதும் 12 நாட்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்கள் கருத்துக்களை ஏற்று பொது முடக்கம் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். வரும் 19.06.2020ஆம் தேதி தொடங்கும் பொது முடக்கத்தில் 21.06.2020 மற்றும் 28.06.2020 ஆம் தேதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழு அளவில் அமலாக்கப்பபடும் என அறிவித்துள்ளது. பொது முடக்க காலத்தில் பொது மக்கள் வாழ்க்கை நடத்திட, குடும்பத்திற்கு ரூ.1000/ வீதம் வழங்குவது போதுமானது அல்ல. தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்து குடும்பத்திற்கு தலா ரூபாய்.5000 நிதியுதவி செய்ய வேண்டும். இந்தப் பொது முடக்க காலத்தில் ஊரடங்கு நடைமுறைககளை பொது மக்கள் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.