ரயில்மறியல் போராட்டம் செய்யபோவதாக திருநெல்வேலி எம்.பி சா.ஞானதிரவியம் அறிவிப்பு

தனியார் ரயில்கள் இயக்கி தனியாருக்கு அதிக வருவாய் கிடைக்க வேண்டும் என்ற உள்நோக் கத்துடன் தனியா ருக்கு ஆதரவாக திருநெல்வேலியை மையமாக இயக்கப் படும் பல ரயில்களை ரயில்வேத்துறை நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் ரத்து செய்யும் திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று திருநெல்வேலி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு இந்த ரயில் ரத்து திட்டத்தை நிறுத்தவில்லை யேன்றால் கோரோனா பிரச்சனை முடிந்து முதல் ரயில் இயக்கப்படும் நாள் அன்று திருநெல்வேலியில் ரயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்துக்கு புதிய ரயில்கள் இயக்காமல் வேண்டும் என்றே தமிழகத்தை புறக் கணித்து வருகின்றது. தற்போது தமிழகத்தில் பல வருடங்களாக இயங்கிகொண்டிருக்கின்ற ஒருசில ரயில்களை ரத்து செய்யபோவதாக அறிவித்துள்ளது. இதில் திருநெல்வேலியை மையமாக வைத்து அதிகபட்சமாக நான்கு ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஒரு சில ரயில் வழித்தடங்களில் தனியார் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ரயில் அதிக வருவாய் கிடைக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அரசு இயங்கும் ரயில்களை வேண்டும் என்றே ரத்து செய்யப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் அரசு ரயில் இயக்கப்பட்டால் தனியார் ரயிலில் அதிக கட்டணத்துக்கு பயணிகள் பயணம் செய்யமாட்டார்கள். தனியார் ரயில் இயங்குவதற்கு முன்பாகவே இவ்வாறு தனியார் ரயில் இயக்க ஆதரவாக செயல்படும் ரயில்வேத்துறை தனியார் ரயில்கள் இயக்கப்படும் போது இன்னமும் என்னவெல்லாம் செய்து முழு ரயில்வே துறையையும் சீரழித்து அனைத்து ரயில்களையும் தனியாருக்கு தாரைவார்க்க மறைமுகமாக வும் நேரடியாகவும் செயல்புரிகின்றனர். மேற்படி ரயில்வே துறையின் அறிவிப்பால் கீழ்க்கண்ட ரயில்கள் குறைக்கப்பட்டும் நிறுத்தப்படவும் உள்ளதாக அறிய வருகிறேன்

திருநெல்வேலி -ஸ்ரீPவைஷ்ணதேவிகத்ரா (காஷ்மீர்) 16787/16788 வாரம் இருமுறை: திருநெல் வேலியிருந்து புதுடில்லி மற்றும் திருப்பதி செல்லும் பயணிகள் இந்த ரயிலை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த ரயிலை ரத்து செய்வது திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பயணிகளை வெகுவாக பாதிக்கும் செயல் ஆகும். தற்போது திருநெல்வேலியிருந்து தற் போது புதுடில்லி செல்ல வாரத்துக்கு நான்கு ரயில்கள் மட்டுமே உள்ளன. இந்த ரயில்களில் திருக்குறள் ரயிலை தினசரி ரயில்களாக இயக்க வேண்டும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இயங்கிகொண்டிருக்கும் ரயிலை ரத்து செய்வது ஏற்றுகொள்ளகூடியது இல்லை. ஆகவே இதற்கு மாற்று ஏற்பாடாக சென்னையிலிருந்து புது டில்லி செல்லும் ரயில்களில் கிராங்டிரங் (ஜி.டி) தினசரி ரயிலை மதுரை வழியாக திருநெல் வேலிக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதைப்போல் திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருநெல்வேலியிருந்து மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்.

திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் 56769/56770: அறுபடைவீடுகளில் இரண்டாம் வீடாக திருச் செந்தூரில் அமைந்துள்ள முருகன் கோவில், திருப்பரம்குன்றத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதல் கோவில், பழநியில் அமைந்துள்ள அறுபடைவீடுகளில் மூன்றாம் கோவில் ஆகிய மூன்று கோவிலையும் இணைக்கும் விதத்தில் இயக்கப்பட்டு வந்த பகல்நேர பயணிகள் ரயில் மதுரை – திருநெல்வேலி மார்க்கத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் முதலில் பழநி வரை இயக்கப்பட்டு வந்தது பின்னர் பாலக்காடு கோட்டத்தின் உள்ள கேரளாவை சார்ந்த அதிகாரிகள் முயற்சியால் கோவைக்கு பதிலாக பொள்ளாச்சி வழியாக பாலக்காடுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. கோவைக்கு நீட்டிப்பு செய்யாமல் பாலக்காடு வரை நீட்டிப்பு செய்தது தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. தற்போது இந்த ரயிலை ரத்து செய்வதற்கு பதிலாக கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழநி, மதுரை, திருநெல்வேலி வழியாக திருசெந்தூர்க்கு புதிய தினசரி இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும்.

திருநெல்வேலி – மைலாடுதுறை ரயில் 56821/56822: திருநெல்வேலியிருந்து பகல் நேரத்தில் தஞ்சாவூர், மைலாடுதுறை, கும்பகோணம் ஆகிய இடங்களுக்கு பயணிக்கும் ஓரே ரயிலான திருநெல்வேலி – மைலாடுதுறை பயணிகள் ரயிலை ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல்நேரத்தில் இந்த மார்க்கத்தில் பயணம் செய்ய வேறு ரயில்கள் இல்லை என்பது குறிப்பிடதக்கது. இவ்வாறு இந்த ரயில் ரத்து செய்யப்படாமல் இந்த ரயிலை ஒருமார்க்கம் தாம்பரம் வரை நீட்டிப்பு செய்து திருநெல்வேலி – தாம்பரம் ரயிலாக மதுரை, திருச்சி, தஞ்சாவூர், மைலாடுதுறை, விழுப்புரம் வழியாக தினசரி பகல்நேர ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது ரயில்வேத் துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும். தென்மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.

திருநெல்வேலி – ஜாம்நகர் 19577/19578: திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரம்இ எர்ணாகுளம், மங்களுர், மும்பை வழியாக குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் என்ற பகுதிக்கு வாரம் இருமுறை ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயிலில் திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பயணிகள் மும்பைக்கு செல்ல அதிக அளவில் பயணிக்கின்றனர். திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வரும் வருவாயில் இந்த ரயில் பெரும் பங்கு வகிக் கின்றது. இந்த ரயிலை மழைகாலங்களில் கொச்சுவேலியுடன் நிறுத்தப்பட்டு கொச்சுவேலி – திருநெல்வேலி மார்க்கத்தில் இந்த ரயில் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கதக்கது. இவ்வாறு வருடத்தில் ஆறுமாதம் ரயில் இயங்கியும் ஆறுமாதம் இயங்காமல் இருப்பது குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகளை குழப்பமடைய செய்யும். ஆகவே இந்த ரயிலை நிரந்தரமாக கொச்சுவேலியுடன் நிறுத்திவிட்டு இதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்தபுரம் – லோகமான்யதிலக் நேத்திராவதி தினசரி ரயிலை திருநெல்வேலி வரையிலும், எர்ணாகுளம் – நிசாமுதீன் மங்களா தினசரி ரயிலை நாகர்கோவில் வழியாக திருநெல்வேலி வரையிலும் நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

கன்னியாகுமரி – மும்பை தினசரி ரயில் : 16381/16382: கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு செல்லும் ரயில் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் உள்ள பயணிகள் அதாவது ராதாபுரம், நான்குநேரி தாலுகாவை சார்ந்த பயணிகள் அதிக அளவில் பயணம் செய்துவருகின்றன். இந்த ரயில் இனி கன்னியாகுமரி – புனா வரை மட்டுமே செல்லும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை இவ்வாறு ரத்து செய்வதற்கு பதிலாக மங்களுர், கோவா வழியாக மும்பைக்கு இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது நெல்லை மற்றும் குமரி மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கன்னியாகுமரி– திப்ருகர் (அசாம்) தினசரி ரயில்: கன்னியாகுமரியிலிருந்து எர்ணாகுளம் வழியாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் என்ற இடத்துக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் தினசரி ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயிலால் தமிழக பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை. தற்போது மத்திய மாநில அரசுகள் கன்னியாகுமரி முதல் கொல்கொத்தா வரை உள்ள கிழக்கு கடற்கரையோரம் தொழில் கூடங்கள் நிறுவு சிறப்பு பொருளாதார காரிடார் அறிவித்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த சிறப்பு பொருளாதார காரிடாரில் செல்லும் பயணிகள் வசதிக்காக இந்த ரயிலை தமிழக பயணிகள் பயன்படும்படியாக திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களை ரத்து செய்யும் போது இதற்கு மாற்று ஏற்பாடாக புதிய ரயில்களை இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது இந்த தடங்களில் செல்லும் பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. இவ்வாறு இயக்க முடியாமல் போனால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள திட்டத்தை ரத்து செய்து இந்த ரயிலை பழைய வழிதடத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் பழையநிலையிலே இயக்க வேண்டும். இவ்வாறு இயக்க முடியாமல் போனால் கோரோனா பிரச்சனை முடிந்து முதல் ரயில் இயக்கப்படும் நாள் அன்று திருநெல்வேலியில் திருநெல்வேலி பாராளுமன்ற பொதுமக்கள், தி.மு.க கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய எனது தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.