ரவுடியால் வெட்டப்பட்ட காவலரை நேரில் சந்தித்து ஆணையர் ஆறுதல் கூறினார்.

அயனாவரம் பகுதியில் சரித்திர பதிவேடு ரவுடி அரிவாளால் தாக்கியதில் காயமடைந்து கீழ் பாக்கம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் முபாரக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப.,  21.8.2020 காலை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, சரித்திரப்பதிவேடு ரவுடி அரிவாளால் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் K-2 அயனாவரம் முதல் நிலைக் காவலர்  முபாரக்கை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினர். இந்நிகழ்வின் போது கூடுதல் ஆணையாளர் (தெற்கு)  R.தினகரன், இ.கா.ப, இணை ஆணையாளர் (கிழக்கு) R.சுதாகர், இ.கா.ப, மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உடனிருந்தனர்.