“ராஷ்மி ராக்கெட்’ இந்திப் படத்தை தமிழ் தெலுங்கில் மறுபதிப்பு செய்யப்படுகிறது.

‘ராஷ்மி ராக்கெட்’ இந்திப் படத்தை உரிமை வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் மாஸ்டர்பீஸ் நிறுவனம். இயக்குநர் நந்தா பெரியசாமி ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, அழகன் அழகி, வண்ண ஜிகினா போன்ற படங்களை இயக்கியவர். மீண்டும் ஒரு நல்ல வாய்ப்புக் காகக் காத்திருந்தவர், மீண்டும் ஒரு திரைக்கதையை உருவாக்கி வைத்திருந்தார். தாழ்த்தபட் ட இனத்தில் பிறந்த ஒரு பெண் பல சோதனைகளை கடந்து எப்படி தடகள போட்டி யில் சாத னை படைக்கிறாள் என்பதே அந்தக் கதை. இதை கேட்ட திரையுலக நண்பர்கள் பலரும் இது நல்ல திரைக்கதை என்று வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.  இந்தச் செய்தி எப்படியோ நடிகை டாப்ஸி க்குத் தெரிந்து அவர் போன் செய்து கதையைக் கேட்டு இருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்துப் போய் அவர் நடிப்பதற்கு சம்மதம் தந்ததுடன் நந்தா பெரியசாமியை மும்பைக்கு அழைத்து அந்தக் கதைக்காக முன் பணத்தையும் கொடுத்து விட்டார்.

அந்த திரைக்கதை தான் இந்தியில் ‘ராஷ்மி ராக்கெட் ‘என்ற பெயரில் படமாக உருவாகிறது. டாப்ஸி நடிப்பில் பிரபல டைரக்டர் ஆகார்ஷ் குரானா இயக்குகிறார். RSVP மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதன் தமிழ் தெலு ங்கு ரீ-மேக் உரிமையை மாஸ்டர்பீஸ் நிறுவனம் பலத்த போட்டிகளுக்கிடையே வாங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது.