ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் 12.08.2020 அன்று தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ரூ.15 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய காதி கிராப்ட் விற்பனை நிலையத்தை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன் (இராமநாதபுரம்) என்.சதன்பிரபாகர் (பரமக்குடி) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அமைச்சர் ஜி.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முதல மைச்சரின் தலைமையில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் மதுரை தேனி மற்றும் இராம நாதபுரம் ஆகிய வருவாய் மாவட்டங்களில் கதர் அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் தரமான கதர் ஆடை ரகங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் பொதுமக்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இராமநாதபுரத்தில் காதி கிராப்ட் விற்பனை நிலையம் அரண்மனை சாலை அருகே தற்காலிக கட்டடத்தில் செயல் பட்டு வந்தது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த விற்பனை நிலையத்தினை இராம நாதபுரம் ஓம் சக்தி நகரில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டடம் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் கதர் விற்பனை குறியீடாக ரூ.58 இலட்சமும் கிராமப் பொருட்கள் விற்பனை குறியீடாக ரூ.22.32 இலட்சமும் நிர்ணயம் செய்து விற்பனை நடைபெற்று வருகிறது.

மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 2019-2020-ம் ஆண்டிற் கான மழைக்கால நிவாரண உதவித் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வீதம் 163 குடும் பங்களுக்கு ரூ.8.15 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2019 – 2020-ம் ஆண்டிற்கு 93 பயனாளிகளுக்கு ரூ.41.32 இலட்சம் மானியத்துடன் கூடிய கடனு தவி வழங்கப்பட்டுள்ளது என கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ் கரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத் தலைவர் சே.பாலசிங்கம் கதர் கிராமத் தொழில்கள் மதுரை மண்டல துணை இயக்குநர் கோ.அருணாச்சலம் உதவி இயக்கு நர்கள் சே.பாரதி (மதுரை) திரு.இரா.குமார் (விருதுநகர்) உதவி கதர் அலுவலர் இல.வடிவேலன் இராமநாதபுரம் காதி கிராப்ட் மேலாளர் ஜி.சரவணபாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.