லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து 2011ம் ஆண்டில் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “காஞ்சனா” . காஞ்சனா படத்தை ஹிந்தியில் “லட்சுமி பாம்” பெயரில் அக்ஷய்குமார் நடிக்க ராகவ லாரன்ஸ் இயக்குகிறார் . ’லட்சுமி பாம்’ படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் நாள் முதல் ஷோவாக வீட்டில் இருந்தபடியே டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் கண்டு மகிழலாம். வெளியிட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அக்ஷய்குமார், கைரா அத்வானி நடித்துள்ள இப்படத்தை ராகவ லாரன்ஸ் இயக்க கேப் அப் குட் பிலிம்ஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஷாபினா கான் மற்றும் தூஷ்கர் கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.