இஸ்ரேல் தாக்குதலில் 188 பாலஸ்தீனர்கள் பலி

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள வழிபாட்டு தலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் வெளியேற்றியது. இதையடுத்து இஸ்ரேல் மீது காசாவில் இருந்து, ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் 7வது நாளாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

காசா நகரிலுள்ள அடுக்கு மாடி கட்டடங்கள், முக்கிய சாலைகளை குறிவைத்து தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது தொடர் வான்வழி தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 188ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தொடர் தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ கட்டரசும் கண்டனம் தெரிவித்துள்ளார்.