எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு” மே மாதம் வெளியீடு

எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு கிரியேன்ஸ் மற்றும் பிஎஸ்எஸ், புரடொஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு என்னும் திரைப்படத்தை இயக்குனர் செ.ஹரி உத்ரா மூலம் தயாரிக்கிறது. தயாரிப்பாளராக டாக்டர்.ப்ரீத்தி சங்கர், உஷா, செ.ஹரி உத்ரா இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குனர் செ.ஹரி உத்ரா இதற்கு முன்னர் “தெரு நாய்கள்”, “படித்தவுடன் கிழித்துவிடவும்”, “கல்தா” படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை மையபடுத்திய கருத்துகளை கொண்டது. இவர் இயக்கும் “எண்.6 வாத்தியார் கால்பந்தாண்டட குழு” கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிரமாண்டமாக எடுக்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த ஏராளமான நிஜ கால்பந்து வீரர்கள் இத்திரைப்படத்தில் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். முன்னணி நடிகர்கள் பலரும் இதில் கதாபத்திரங்களாக நடித்துள்ளனர். குறிப்பாக கதாநாயகியாக ஐரா, கதாநாயகனாக ஷரத், அருவி புகழ் மதன், நடிகர் விஜய்முத்து, கஜராஜ், ஹரி, பீம்ஜி, ராசி அழகப்பன் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். வில்லனாக ஸ்டண்ட் இயக்குனர் நரேந்திரன் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு – வினோத்ராஜா, இசை – ஏ.ஜெ.அலிமிர்ஸாக், எடிட்டிங் – கணேஷ்குமார், கிஷோர், ஸ்டண்ட் – கோட்டி, நடனம் – சசிகுமார், பாடல்கள்- “குவைத்” வித்தியாசாகர், செ.ஹரி உத்ரா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-செ.ஹரி உத்ரா. மே மாதம் திரைக்கு வர இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விளையாட்டில் எவ்வாறு அரசியல் புகுத்தப்படுகிறது என்பதை யதாத்தமாக முழுக்க முழுக்க ஆக்ஷனாக படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு முழுவதும் 90 சதவீதம் இரவில் கதை நடைபெறும் வகையில் ஏராளமான நடிகர்களுடன் தத்ரூபமாக மதுரை மற்றும் பரமக்குடி, இராமநாதபுரம், இராமேஸ்வரம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் தொடர்பு: டி.ஒன்.