குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு வட்டம் அகரம் கிராமத்தில் உள்ள அகரம் ஏரி புனரமைக்கும் பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் .இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 2019-2020-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்ட பகுதிகளில் ரூ.517.00 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளவும் மேட்டூர் அணைக் கோட்ட பகுதிகளில் ரூ.121.40 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிமராமத்து திட்டத்தின்கீழ் 2019 – 20 நாமக்கல் மாவட்டம் சரபங்கா வடிநில கோட்டத்தில் ரூ.83.00 இலட்சம் மதிப்பீட்டில் மோகனூர் வட்டத்திலுள்ள பள்ள வாய்க்காலில் புனரமைக்கும் பணிகளும் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வடகரையாத்தூர் கிராமத்தில் இராஜ வாய்க்காலுக்கும் காவிரியாற்றுக்கும் இடையே இராஜவாய்க்கால் வலது கரை 200 மீட்டர் நீளத்திற்கு கரையை புனரமைக்கும் பணிகளும் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அய்யம்பாளையம் கிராமத்தில் இராஜவாய்க்காலில் அய்யம்பாளையம் தலைப்பு மதகின் மேல்புறம் மற்றும் கீழ்புறம் புனரமைக்கும் பணிகளும் ரூ.45 லட்சம் மதிப் பீட்டில் குன்னத்தூர் கிராமத்தில் இராஜவாய்க்காலில் குன்னத்தூர் வெளிப்போக்கி புனரமைக்கும் பணியும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இராஜவாய்க்காலில் குன்னத்தூர் உபரிநீர் போக்கி புனரமைக்கும் பணியும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சின்ன கவுண்டம் பாளையம் வெளிப்போக்கி புனரமைக்கும் பணியும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வேலூர் கிராமத்தில் இராஜவாய்க்காலின் இடதுபுறம் மைல் 25800 மீட்டர் பகுதியில் புனரமைக்கும் பணிகளும் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் வேலூர் கிராமம் இராஜவாய்க்கால் இடதுபுறம் மைல் 33800 மீட்டர் பகுதியில் புனரமைக்கும் பணிகளும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நஞ்சை இடையார் கிராமத்தில் பொய்யோரி வாய்க்கால் மைல் 1600 மீட்டர் மற்றும் 4200 மீட்டர் பகுதிகளில் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பரமத்தி வேலூர் வட்டம் செருக்கலை கிராமத்தில் உள்ள செருக்கலை ஏரி மற்றும் வழங்கு வாய்க்கால் புனரமைக்கும் பணிகளும் ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் இராசிபுரம் வட்டம் பெரிய கோம்பை கிராமத்தில் உள்ள சாலக்காடு அணைக்கட்டு மற்றும் பெரிய கோம்பை அணைகட்டுகள் புனரமைக்கும் பணிகளும் ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் இராசிபுரம் வட்டம் புதூர் பாலப்பட்டி கிராமத்தில் உள்ள பெரப்பன் சோலை அணைக்கட்டு மற்றும் புதூர் பாலப்பட்டி அணைக்கட்டுகள் புனரமைக்கும் பணிகளும் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில்
திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் கிராமத்தில் உள்ள மல்லசமுத்திரம் சின்ன ஏரி புனரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிமராமத்து திட்டத்தின்கீழ் மேட்டூர் அணைக்கோட்டத்திற்குட்பட்ட 1583 பாசனதாரர்களின் 4629 ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடையும் வகையில் மேட்டூர் கிழக்குகரை வாய்க் கால் முறைமை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் மேட்டூர் கிழக்குகரை வாய்க் கால் முறைமை பாசன விவசாயிகள் சபை ஆகியவற்றின் மூலமாக மொத்தம் ரூ.121.40 லட்சம் மதிப்பீட்டில் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் அக்ரஹாரம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் மேட்டூர் கிழக்குகரை கால்வாயின் 3 கிளைவாய்க்கால்கள் மற்றும் 2 உப கிளை வாய்க்கால்களில் 6590 மீட்டர் நீளத்திற்கு தூர் வாரும் பணிகளும் 4855 மீட்டர் நீளத்திற்கு கரைகள் பலப்படுத்தும் பணிகளும் 818 மீட்டர் நீளத்திற்கு கான்கிரிட் பக்கச்சுவர் கட்;டி லைனிங் செய்யும் பணிகளும் பழுதடைந்த 22 மதகுகளை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 12.09.2019 அன்று திருச்செங்கோடு வட்டம் அகரம் ஏரியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் மதகு சீரமைக்கும் பணி ஏரியின் கரை கான்கிரிட் சுவர் அமைக்கும் பணி கரை பலப்படுத்தும் பணி உள்ளிட்ட குடிமராமத்து பணிகள் அகரம் ஏரி நீர் பாசன விவசாயிகள் சங்கத்தின் மூலமாக நடைபெற்று வருவதை விவசாய சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில்ல் சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் திருமதி.கவிதா ராணி உதவி பொறியாளர் திரு.இளங்கோ பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.