சென்னை-நெல்லை, கோயம்புத்தூர்-நாகர்கோவில், மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் – சா.ஞானதிரவியம் எம்.பி.கோரிக்கை

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் அவர்கள் தமிழக தலைமைச் செயலாளருக்கு மின்அஞ்சல் மூலம் அவசரமாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதா வது: 7.9.2020 லிருந்து சென்னையிலிருந்து சில முக்கிய ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவைகளில் சென்னையிலிருந்து திருநெல் வேலி வரை வரும் நெல்லை அதி விரைவு ரயில் சேவை அளிக்கப்படாதது மிகவும் வேதனைக்குரியது. கன்னியாகுமரி ரயில் கன்னியாகுமரி மாவட்டத்தின் 90 விழுக்காடு மக்கள் பயன்படுத்துவதால் நெல்லை மாவட்ட மக்களுக்கு பெரிதும் பயனில்லா தினால் நெல்லை மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் நெல்லை எக்ஸ்பிரஸ் மிகவும் அவசியம். நெல்லை அதி விரைவு ரயிலில் இணைக்கப்படும் 24 ரயில் பெட்டி களும் எப்பொழுதும் நிரம்பி ரயில்வே துறைக்கு லாபத்தை ஈட்டித்தருவதாகும். தற்பொழுது தென்னகத்திற்கு கன்னியாகுமரி ரயில் மட்டிலுமே இயக்க உத்திரவிட்டிருப்பதினால் 20 விழுக்காடு பயணிகள் மட்டுமே பயன்பெற முடியும்.

அதே போல் மும்பையில் நமது தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு எந்தவித வசதியும் இன்றி பரித விக்கிறார்கள். மேற்கூறிய ரயிலை இயக்குவதற்கு மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் அனுமதி அளிக்க மறுப்பின் அந்த ரயிலை மும்பையிலிருந்து எடுத்து Non-Stop ஆக இயக்கி முதல் நிறுத்தத்தை தமிழக்கதில் அமைக்கும்படியாக இயக்கும்படி செய்யும்படி ஆலோசனை செய்து மும்பை-நாகர்கோவில் ரயிலையும் இயக்கிட உத்திரவிட வேண்டுகிறேன். மேலும் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தொழில் நகரமாகும். தென் தமிழகத்திலிருந்து ஏராளம் மக்கள் கோயம் புத்தூருக்கு வேலைக்காக செல்லும் நிலையில் நாகர்கோவில்-கோயம்புத்தூரி ரயிலும் மிகவும் அவசியம். ஆகையால் தமிழக தலைமைச்செயலாளர் அவர்கள் ஏற்கனவே ரயில்களை உத்திர விட்ட பட்டியலோடு நான் ஏற்கனவே தெரிவித்துள்ளபடி சென்னை-திருநெல்வேலி-1), கோயம் புத்தூர்-நாகர்கோவில்-2) மற்றும் மும்பை- நாகர்கோவில் -3) ஆகிய ரயில்களையும் சேர்த்து இயக்கும் வகையில் அனுமதி அளித்து அதனை தென்னக ரயில்வே பொதுமேலா ளருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாற தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.