தஞ்சாவூரில் இயக்கிவரும் அரசு கொரோனா மையங்களை ஆய்வுச் செய்தார்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

தஞ்சாவூர் 27, மே.:- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேர்வு மையத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய அறைகள் கட்டப்பட்டு வருவதையும், தஞ்சாவூர் மாநகராட்சி இரயில்வே மருத்துவமனையில் செயல்படும் கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களை வகைப்படுத்தும் மையத்தினையும், வல்லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இயங்கி வரும் கொரோனா தொற்று சிகிக்சை மையத்தையும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் நிரப்பப்படுவதையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். பின்னர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் என்னிடத்தில் “Zoho” நிறுவனம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் 100 ஆக்சிஜன் ப்பிளோ மீட்டர் செறிவூட்டும் ஆக்ஸிஜன் கருவியினை வழங்கினார்கள். இந்த நிகழ்வில், அரசு கொறடா மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.