தமிழக அரசுக்கு நபார்டு ரூ.2485 கோடி நிதியுதவி

சென்னை, ஜூலை 22, 2020. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு), தமிழக அரசுக்கு ரூ.2485 கோடி நிதியுதவிக்கு அனுமதி அளித்துள்ளது. நபார்டின் ஊரக உள்கட் டமைப்பு மேம்பாட்டு நிதி (ஆர்.ஐ.டி.எஃப்) மற்றும் நபார்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு உதவி (நிடா) ஆகிய திட்டங்களின் கீழ் சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 17.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.2066 கோடிக்கு அனுமதி வழங்கி
உள்ளது. மேலும், சேலம் மாவட்டம் தலைவாசலில் உயர்நிலை ஒருங்கிணைந்த கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.419 கோடி வழங்கியுள்ளது என்று நபார்டின் தமிழ் நாடு மண்டல அலுவலகத்தின் தலைமைப் பொது மேலாளர் திரு.எஸ்.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.