தமிழ்நாட்டை கனடாவின் பக்கம் திரும்பச் செய்த ரொரான்ரோ உலகத் தமிழ் திரைப்பட விழா 2020

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இம்மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருந்த நிலையில், COVID19 காரணமாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிறப்பாக கடந்தவாரம் நடைபெற்று விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டிருந்தன. உலகெங்கிலும் இருந்து 242 படங்கள் விழாவுக்கு சமர்ப்பிக்கப்பட்டித்தந்தது. உலகின் தலைசிறந்த ஜூரி (Jury) குழுமம், சகல திரைப்படங்களையும் பார்த்தது வெற்றிபெற்ற திரைப்படங்களை தேர்வுசெய்திருந்தார்கள். அதில் இயக்குநர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7 “ விழாவில், மூன்று விருதுகளை வென்றுள்ளது! ஜீரி விருதான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த தனி சோலோ நடிப்பு என மூன்று விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்த இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி திரைப்படம் 2 விருதுகளை வென்றுள்ளது. இலங்கை, இந்திய, மலேசியா, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்த படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. விருதுகள் விபரம்:

Jury Award
Jury Award Best Feature Film: OTHTHA SERUPPU size 7 (Director / Producer R. Parthiban)

Jury Award Best Feature Film Director: Radhakrishnan Parthiban (OTHTHA SERUPPU size 7)

Jury Award Best Feature Film Women Director: Halitha Shameem (SILLU KARUPPATTI)

Jury Award Best Experimental Feature Film: SILLU KARUPPATTI (Director: Halitha Shameem)

Jury Award Best Trans-Themed Feature Film: COFFEE CAFE (Arunkumar Senthil)

Jury Award Best Crime Thriller Feature Film: Pulanaivu (Director: Shalini Balasundaram)

Jury Award Best Feature Documentary Film: The Lamp of Truth (Director: Thanesh Gopal)

Jury Award Best Short Film Director: Anand Murthy (S I N A M)

Best Solo Act Award: Radhakrishnan Parthiban (OTHTHA SERUPPU size 7)

Audience Award
Audience Award Best Feature Film: Kanni Maadam (Director: Bose Venkat)
Audience Award Best Short Films: Kaadaaru (Director: Calis Peter Xavier)
Audience Award Best Short Films: Hunter Maniyam (Director: Mathi Sutha)
Audience Award Best Long Short Films: Female (Director: Karthik Siva)

Special Jury Award: Outstanding Performance
Rising Star Emerging Director: Mathi Sutha (Hunter Maniyam)
Rising Star Emerging Actress: Sutharshi Ignatius (Irai)
Best Short Film: Flood (Director: Sivalingam Vimalrajh)

Awards For Album Song
Award for Best Album Song: Kaatril (Srivijay Ragavan)
Award for Peace Song: Namakken Aararivu (ShriRam Sachi)

உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டு நடத்தப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் என்பன வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை காலமும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை. நிச்சயமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இக்குறையை எதிர்வரும் காலங்களில் மிகவும் சிறப்பானதாக நிறைவுசெய்யும். தமிழ் திரைப்படங்களையும், அதன் பின்னால் உள்ள கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி, பாராட்டி, மகிழ்ந்து கொண்டாட எதிர்வரும் ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா வரும் செப்டம்பர் 2021 ரொரான்ரோவில் நடைபெறவுள்ளது.