தேனி மாவட்டம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.152.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் போ.அம்மாபட்டி கிராமத்திற்குட்பட்ட போ.மீனாட்சிபுரம் கண்மாய் உத்தமபாளையம் வட்டம் பொட்டிபுரம் கிராமத்திற்குட்பட்ட எர்ணன்குளம் கண்மாய் தேவாரம் கிராமத்திற்குட்பட்ட சின்னதேவிகுளம் கண்மாய் ஆகிய கண்மாய்கள் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ்; நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் 15.09.2020 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தொpவித்ததாவது.

தமிழக அரசு தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும் நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் விவசாயிகளின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள குளங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள் ஏhpகள் மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல் பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள் மதகுகளை மறுகட்டுமானம் செய்தல் நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி போடிநாயக்கனூர் வட்டம் போ.அம்மாபட்டி கிராமத்திற்குட்பட்ட போ.மீனாட்சிபுரம் கண்மாயில் ரூ.86.00 இலட்சம் மதிப்பீட்டிலும் உத்தமபாளையம் வட்டம் பொட்டிபுரம் கிராமத்திற்குட்பட்ட எர்ணன்குளம் கண்மாயில் ரூ.34.00 இலட்சம் மதிப்பீட்டிலும்; தேவாரம் கிராமத்திற்குட்பட்ட சின்னதேவிகுளம் கண்மாயில் ரூ.32.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.152.00 இலட்சம் மதிப்பீட்டில் கண்மாய்களில் உள்ள முட்செடிகளை அகற்றி தூர்வாhp கரைகளை பலப்படுத்தும் பணி மடையில் சட்டர் மற்றும் கலுங்கு மராமத்துப்பணி சிமிண்ட் எல்லைக் கற்கள் அமைத்து அளவீடு செய்யும் பணி
ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தண்ணீர் முழு கொள்ளவு தேங்கிட வழிவகை செய்யும் பணி ஆகிய சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி போ.மீனாட்சிபுரம் கண்மாயில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம்; அதனை சுற்றிவுள்ள பகுதியில் 183.64 ஹெக்டர் பாசன பரப்பு உறுதி செய்யப்படுவதுடன் மறைமுகமாகவும் 80 கிணறுகள் 120 ஆழ்துழை கிணறுகள் மூலம் 350 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். மேலும் இக்கண்மாய்யை சுற்றியுள்ள விசுவாசபுரம் பத்ரகாளிபுரம்  .அம்மாபட்டி போ.மீனாட்சிபுரம் ஆகிய கிராம மக்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வசதி பெறும். உத்தமபாளையம் வட்டம் பொட்டிபுரம் கிராமத்திற்குட்பட்ட எர்ணன்குளம் கண்மாயில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவதன் மூலம் 45.50 ஹெக்டர் பாசன பரப்பு உறுதி செய்யப்படுவதுடன் மறைமுகமாகவும் 50 கிணறுகள் மற்றும் 60 ஆழ்துழை கிணறுகள் மூலம் 150 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். மேலும் இக்கண்மாய்யை சுற்றியுள்ள கோனாம்பட்டி எர்ணம்பட்டி வெம்பக்கோட்டை திம்மி நாயக்கன்பட்டி மற்றும் இதர கிராம மக்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வசதி பெறும். தேவாரம் கிராமத்திற்குட்பட்ட சின்ன தேவிகுளம் கண்மாயில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவதன் மூலம் 79.52 ஹெக்டர் பாசன பரப்பு உறுதி செய்யப்படுவதுடன் மறைமுகமாகவும் 50 கிணறுகள் மற்றும் 80 ஆழ்துழை கிணறுகள் மூலம் 200 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். இக்கண்மாய்யை சுற்றியுள்ள தேவாரம் ஓவுலாபுரம் வெம்பக்கோட்டை கிருஷ்ணம்பட்டி மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வசதி பெறும். மேலும் இக்கண்மாய்யை சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். எதிர்கால சந்ததியினாpன் நலன் கருதியும் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் பொருட்டும் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளை கருத்தில் கொண்டு மழைக்காலங்களில் பெறக் கூடிய நீhpனை வீணாக்காமல் முறையாக விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) தாக்ரே சுபம் பொதுப் பணித்துறை (நீர்வள ஆதாரஅமைப்பு) செயற்பொறியாளர் கார்த்திகேயன் உதவி செயற் பொறியாளர் சௌந்தரம் உதவிப் பொறியாளர்கள் மல்லிகா ராமேஸ்வரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.