பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம்.
இரண்டாவது அலையில் நாம் பல உறவுகளை இழந்து தவிக்கின்றோம். பல பத்திரிகையாளர்கள் வேலை இழப்பு , ஊதியக்குறைப்பு  என பொருளாதார ரீதியில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில்  முதற்கட்டமாக,கோயம்பேடு வணிகரும் தமிழ்ப் பற்றாளரும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளருமான *த.மணிவண்ணன்* தனது தந்தையின் பெயரால் நடத்தப்படும் ‘*தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை*’ மூலம் அரிசி (5 கிலோ), பருப்பு (1 கிலோ), கோதுமை மாவு (1 கிலோ), ரவை (1 கிலோ), மைதா (1 கிலோ), சர்க்கரை (1 கிலோ), மாம்பழங்கள் மற்றும் ஆரஞ்சுப் பழங்கள் அடங்கிய உணவுப் பொருட்கள் கொண்ட  300 எண்ணிக்கையிலான தொகுப்பினை வழங்கியுள்ளார் . *லோகா பவுண்டேஷன் சார்பில் யூத்திங்க் அமைப்பு* 1000 எண்ணிக்கையில் 1 நீராவி பிடிக்க உதவும் கருவி,முகக்கவசம் , மல்ட்டி விட்டமின் மாத்திரைகளின்  தொகுப்பு,கபசுர குடிநீர், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை தருகின்றனர்.  .*பத்திரிகையாளர்கள் சார்பில் நன்கொடையாளர்கள் திரு.த.மணிவண்ணன் மற்றும் திரு.அப்துல் கனி ஆகியோருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்…* நிவாரண உதவிகளை  சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் *திருமிகு.உதயநிதி ஸ்டாலின்* அவர்கள் வழங்கி நிவாரணப் பணிகளைத் துவக்கி வைத்தார். *அவருக்கு நமது நன்றிகள் பல. *  கொரோனா நோய்த்தொற்று பரவல் உள்ள இந்த காலக்கட்டத்தில் மிகுந்த அச்சத்துடன் தான் எளிய நிகழ்வை நடத்தி முடித்தோம்.கிட்டத்தட்ட 200 பத்திரிக்கையாளர்கள் நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.

ஏதேனும் ஒரு வரைமுறை நமக்குத் தேவைப்படுகிறது .புரிந்து கொள்ளவும் ஒத்துழைப்பை நல்கவும் வேண்டுகிறோம் .* *ஒற்றுமையாய் இந்த கொரோனா நெருக்கடியைக் கடப்போம்!  *
பாரதிதமிழன்
இணைச்செயலாளர்
*சென்னை பத்திரிகையாளர் மன்றம்*
02-06-2021