மேயர் ஆர்.பிரியா ஶ்ரீ ராமச்சரண் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் (24.12.2025) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். சென்னை மழலையர் பள்ளிகளிலுள்ள 37 வகுப்புகளில் பணியாற்றும் 37 தற்காலிக மாண்டிசோரி ஆசிரியர்களுக்கு ஶ்ரீ ராமச்சரண் தொண்டு நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது. காக்னிசன்ட் அறக்கட்டளை வாயிலாக மாண்டிசோரி பயிற்சிக்கான நிதி உதவியினை வழங்கியது, எஸ்வி அறக்கட்டளை (Essvee Foundation) சார்பில் 37 வகுப்பறைகளுக்கு தேவையான ரூ.60 இலட்சம் மதிப்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக மாநகராட்சியின் மழலையர்
பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி வரும் ஶ்ரீ ராமச்சரண் அறக்கட்டளை நிர்வாகிகளையும் கல்விக்காக ஆதரவளித்திடும் காக்னிச்ன்ட் பவுண்டேசன் மற்றும் எஸ்வி அறக்கட்டளை நிர்வாகிகளையும் மேயர் பாராட்டினார். இந்நிகழ்வின்போது, இணை ஆணையர் (கல்வி) க.கற்பகம், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த.விசுவநாதன், ஶ்ரீ ராமச்சரண் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பாரதி, காக்னிசன்ட் பவுண்டேசன் நிர்வாகி புருசோத்தம்மன், எஸ்வி அறக்கட்டளை நிறுவனர் சிங்காரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேயர் ஆர்.பிரியா ஶ்ரீ ராமச்சரன் தொண்டு நிறுவனம் சார்பில் மாண்டிசோரி பயிற்சி பெற்ற சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் எஸ்வி அறக்கட்டளை சார்பில் மாண்டிசோரி கல்வி உபகரணங்களையும் இன்று வழங்கினார்.
