ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டம்

முதலில் கன்னியாகுமரி – சென்னை வழிதடத்தில் தனியார் ரயில் விடப்படும். ஆறுமாத காலத்துக்கு அடுத்து இந்த வழித்தடம் வருவாய் குறைவாக இருக்கின்றது என்று கூறி தனியார் கம்பெனியின் முதலாளி நேரடியாக டில்லியில் போய் பார்க்க வேண்டியவர்களை பார்த்து அரசு ரயிலான கன்னியாகுமரி – சென்னை 12633-12634 ரயிலின் காலஅட்டவணையை மாற்றம் செய்து மோசமான காலஅட்டவணையாக மாற்றம் செய்யப்படும். இதற்கு எதாவது தெற்கு ரயில்வே அதிகாரி எதிர்ப்பு தெரிவித்தால் அவர் இந்த இடத்திலிருந்து டிரான்ஸ்பர் செய்து தனியார் ரயில் நிறுவனத்துக்கு வேண்டப்பட்ட ரயில்வே அதிகாரி அந்த இடத்தில் நியமிக்கப்படுவார். இது மட்டுமில்லாமல் கன்னியாகுமரி – சென்னை 12634 ரயிலை மதுரை அல்லது திண்டுக்கல் பக்கத்தில் வைத்து ஓர் ரயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் நிறுத்திவைத்து விட்டு தனியார் ரயில் ஓவர் டேக் செய்து அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சென்னை செல்லுமாறு இயக்கப்படும் அல்லது இயக்கவைக்கப்படம். அரசு ரயிலுக்கு வேகம் குறைவாக செல்லவும், தனியார் ரயில் அதிக வேகத்தில் செல்ல ரயில் நிறுவனத்துக்கு வேண்டப்பட்ட ரயில்வே அதிகாரியால் அறிவுறுத்தப்படும்.

அப்போது கன்னியாகுமரி – சென்னை 12634 ரயில் சென்னைக்கு காலதாமதமாக வேண்டும் என்றே சுமார் 7:30 முதல் 9:00 மணிக்கு மேல் வந்து சேருமாறு இயக்கப்படும். இவ்வாறு இயங்கும் போது பயணிகள் கன்னியாகுமரி – சென்னை 12634 ரயிலை விட்டு தனியார் ரயிலுக்கு படிபடியாக மாறிகொண்டே இருப்பார்கள். ஆறு மாதத்துக்குள் சுமார் 80 முதல் 90 சதவிகித பயணிகள் தனியார் ரயிலுக்கு சென்றிருப்பார்கள். அரசு ரயிலில் போனால் சரியான நேரத்துக்கு போக முடியாது என்று பரப்பி மக்கள் மத்தியில் பதியவைத்து விடுவார்கள். அடுத்து கன்னியாகுமரி – சென்னை 12634 ரயில் 50 சதவிகத்துக்கும் குறைவான பயணிகளுடன் நஷ்டத்தில் இயக்குகின்றது என்று பத்திரிகை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்புவார்கள். இந்த செய்தியை யாருமே பெரிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். அடுத்து அரசு கன்னியாகுமரி – சென்னை 12634 ரயில் சேவையை சிறிது காலம் கழிந்து தானாகவே நிறுத்திவிடும். இதையும் யாரும் கண்டு கொள்ளவே மாhட்டார்கள்.

இப்போது தான் தனியார் ரயில் நிறுவனத்தின் ஆட்டம் ஆரம்பம் ஆகும். தங்கள் விருப்பத்து;கு கட்டணத்தை அவர்களே நிர்னயித்து கொள்வார்கள். இதை அரசும் கண்டுகொள்ளாது. அடுத்து சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தனியார் ரயில் நிறுவனம் தனது இலாபத்தை எல்லாம் எடுத்து விட்டு கள்ளகணக்கு எழுதி நஷ்டத்தில் நாங்கள் ரயில் இயக்குகின்றோம் இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்கின்றோம் என்று ஆறு மாதம் பத்திரிகை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்புவார்கள். பின்னர் அரசு தனது சொந்த நிதியிலிருந்து பலஆயிரம் கோடிகளை இலவசமாக தனியார் ரயில் நிறுவனத்துக்கு கொடுக்கும் இது மட்டுமில்லாமல் வங்கியிலிருந்து குறிப்பாக அரசு வங்கி பெரிய அளவில் கடன் தொகை வாங்கியிருக்கும். அதையும் தள்ளுபடி செய்வார்கள். இதில் சிறிதளவு கமிஷன் போய் சேரவேண்டியவர்களுக்கு சென்றுவிடும். இவ்வாறு கிடைத்த பணத்தில் தனியார்ரயில் நிறுவனம் நாய்க்கு பிஸ்கட் போட்டது போல் சிறதளவு பணத்தை அரசியல் கட்சிகளுக்கு பத்திரங்கள் மூலம் நன்கொடையையும் கொடுத்துவிடும். ஏனென்றால் இதைப்பற்றி தகவல்அறியும் சட்டம்வாயிலாகவோ, நீதிமன்றம் வாயிலாகவோ யாருமே கேட்க முடியாது.

இதுதான் 2030க்குள் ரயில்வேறையில் இந்தியாவில் நடக்க இருக்கின்றது. இந்த திட்டம் நடைமுறைபடுத்த ஒருசில நேர்மையாக அதிகாரி அதாவது ரயில்வே அதிகாரி அல்லது வங்கி அதிகாரி அல்லது நீதிபதி மறுப்போ எதிர்ப்போ தெரிவித்தால் அவர் வேறு இலாகாவுக்கு மாற்றபடுவார். அல்லது தமிழ்படங்களில் வருகின்றது மாதிரி விபத்தில் கொல்லபடுவார்.

இது போன்ற நடக்காது என்று உறுதியாக யாராலும் கூறுமுடியாது. நமது அரசியலமைப்பு சட்டம் இவ்வாறுதான் உள்ளது. இந்தியாவில் லஞ்சம், அதிகாரதுஷ்பிரயோகம், கடுமையான உடனடி தண்டனை இல்லாதது, காலதாமதமான நீதி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் இவ்வாறு இருக்கும் வரை தனியார் மையம் என்பது நடைமுறைக்கு சாதாரண மக்களுக்கு எந்த விதத்திலும் பயனில்லாத கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான இந்தியாவில் நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.