வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றடைந்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது 3.6.2021 அன்றுஆய்வின் மூலம் அறியப்பட்டது. அவற்றில் 9 வயதுள்ள நீலா என்ற பெண் சிங்கம் 3.6.2021 அன்று இந்நோயால் இறந்தது. சிங்கங்களுக்கு கோவிட்-19 நோய் தொற்று ஹைதராபாத் உயிரியல் பூங்கா, ஜெய்பூர் உயிரியல் பூங்கா மற்றும் எட்டாவா (உத்திரபிரதேசம்) சிங்க உலாவிடப் பூங்காக்களில் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 11 சிங்கங்களின் மாதிரிகள் பற்றிய ஆய்வறிக்கை கிடைத்ததன் தொடர்ச்சியாக மேலும் 3 சிங்கம் மற்றும் 4 புலிகளின் மாதிரிகள் விரிவான ஆய்விற்காக இரண்டு நாட்களுக்கு முன் பரோலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து சிங்கங்களின் மாதிரிகள் ஹைதராபாத்திலுள்ள செல் உயிரணு மரபியல் மூலக்கூறு மையத்திற்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு செய்யநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலங்குகள் சார்ஸ் கோ-2 வைரஸ் வரிசைமுறை பகுப்பாய்வு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு புரிந்து, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களுக்கு பூங்கா மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் இணைந்து வழங்கும்சிகிச்சை கேட்டறிந்தார்.  ​மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்சுற்றுச்சூழல் பாதிக்காத மின்கள ஊர்தி மூலம் சிங்கங்கள் இருப்பிடம், புலிகள் இருப்பிடம் மற்றும் சிங்கங்கள் இருப்பிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து விலங்கு காப்பாளர்கள் மற்றும் பூங்கா அலுவலர்களுக்குமுறையான தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். உயிரியல் பூங்காவின் இயக்குநர் திரு. தெபாஷிஸ் ஜானா அவர்கள், பூங்காவில் எடுக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விளக்கியதோடு,மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (ஊஷ்ஹ) மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)அறிவுறுத்துதல்களின்படி நிலைத்த செயல்முறைகளை பின்பற்றப்படுவதையும் குறித்து விளக்கி கூறினார்.  டாக்டர் ஸ்ரீதர் தலைமையிலான பூங்கா மருத்துவக்குழு,பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு வழக்கப்படும் சிகிச்சையின் சாராம்சங்களையும், பிற விலங்குகளுக்கு பூங்காவில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விளக்கிக் கூறினர்.​மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வன உயிரினங்களின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எவ்வித சுணக்கமுமின்றிமேற்கொள்ள வேண்டும் என்றும், வன உயிரின பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த njitahd நடவடிக்கைகளை cldoahf மேற்கொள்ளுமாறும் பூங்கா நிர்வாக அலுவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். ​இந்த ஆய்வின்போது மாண்புமிகு ஊரக தொழில் துறை அமைச்சர்திரு.தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்திரு.க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வரலட்சுமி மதுசூதனன், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை, முதன்மைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., முதன்மை jiyik வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) திரு.எஸ்.யுவராஜ், இ.வ.ப.,,முதன்மை jiyik வனப் பாதுகாவலர் மற்றும் jiyik வனஉயிரினக்காப்பாளர் திரு.எஸ்.எம்.அப்பாஸ், இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.