விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளை ஒன்றினைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் கட்சி ஆரம்பிக்கிறார்

விஜய் ரசிகர்கள் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பின் அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க விஜய் தந்தை மீண்டும் முடிவு செய்துள்ளார். பொங்கலுக்கு உதயமாகும் புதிய கட்சியில் விஜய் மக்கள் மன்ற நார்வாகி களை இணைக்க முடிவெடுத்துள்ளார். இன்று நடந்த ஆலோசனைக்கு பிறகு 20 மாவட்ட பொறுப் பாளர்கள் எஸ்.ஏ.சி நியமித்துள்ளார், இந்த தகவல் அறிந்த நடிகர் விஜய் மீண்டும் அதிர்ச்சியடைந் துள்ளார். கூட்டத்தில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்ததாகவும் அப்போது விஜய் தன்னை கட்டியணைத்து மோதிரம் அணிந்ததாகவும் கூறி தனது புது நிர்வாகிகளை உற்சாகமடையச் செய்துள்ளார்.