ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் பாலா பேசியதாவது: “நான் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். இன்று இங்கு வரும்போது பதாகையை பார்த்ததும் எனக்கு அடிவயிற்றில் அயன் பாக்ஸ் வைத்து தேய்த்தது போல இருந்தது. நான் நடித்த படத்தின் பதாகை என்று வியப்பாக இருந்தது. எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது எப்படி இருக்கிறது என்றால் வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு உலக கோப்பை கொடுத்தது போல இருக்கிறது. கனவில் கூட நினைத்து பார்க்காத ஒன்று எனக்கு நடந்திருக்கிறது போல் தோன்றுகிறது. காரைக்காலில் பிறந்த நான் ஒருவரின் உறுதுணையால் இங்கு நிற்கிறேன். காரைக்கால் பாலாவாக இருந்த நான் காந்தி கண்ணாடி பாலாவாக மாறியதற்கு காரணம் அமுதவாணன் அண்ணன்தான்.******
நான் எதற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரங்களை சுமார் 19 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனா 11 படங்களில் நான் வரவில்லை பட தொகுப்பில் என்னுடைய காட்சி தேவை இல்லை என்று நீக்கி விட்டதாக கூறுவார்கள் அதனால், அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஷெரிஃப்-ம் நானும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அப்போதே எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுங்கள். ஐந்து அல்லது ஆறு காட்சிகள் கதாநாயகனுடன் நண்பனாக காதலி சேர்த்து வைக்கும் படியான இப்படி ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டேன். அவரும் சரி என்று கூறினார். அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியின் போது ராகவா லாரன்ஸ் நீ என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார். நான் கதாநாயகன் என்று கூறினேன். அதற்கு அவர் வாழ்த்தினார். மேலும், நான் ஏன் உன்னை கதாநாயகனாக வேண்டும் என்று கூறுகிறேன் என்றால், நீ கதாநாயகனாக வளர்ந்தால் இன்னும் பலருக்கு உன்னால் உதவி செய்ய முடியும் என்று கூறினார். அந்த வார்த்தையை நான் பிடித்துக் கொண்டு கதாநாயகன் ஆவதற்கான எல்லாம் முயற்சிகளையும் செய்தேன். அதுமட்டுமல்லாமல் மேடையிலேயே எல்லோரை பார்த்தும் இவனுக்கு யாராவது கதாநாயகன் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் ஷெரிஃபை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நிகழ்ச்சிகள் தான் என்று கூறினேன். படம் நடிக்கிறாயா? என்று கேட்டார். நான் உடனே சம்மதித்தேன். தயாரிப்பாளர் உன்னை வைத்து படம் எடுக்க சம்மதித்து விட்டார். நீ தான் கதாநாயகன் என்று கூறினார். அதேபோல் என்னை கதாநாயகனாக ஆக்குவதில் விருப்பம் தெரிவித்த முதல் தயாரிப்பாளர் ஜெய் கிரண் சார் தான். நம்முடைய குடும்பத்தாரும் உறவினர்களும் 5 லட்சங்கள் நம்மை நம்பி கொடுத்தாலே பெரிய விஷயம். ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சிலர் உதவுவார்கள், இல்லையா! அப்படித்தான் பல கோடிகளை என்னை நம்பி செலவழித்திருக்கிறார். அவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. பாலாஜி சக்திவேல் சாரிடம் கதை கூறிய போது நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். நான் கதாநாயகன் என்றது மறுத்துவிடுவார் என்று தயங்கினேன். ஆனால், இந்த சாதாரண ஒரு ஆளுக்காக அவர் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி. அதேபோல் தான் அர்ச்சனா அம்மாவும் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அடுத்ததாக, கதாநாயகி தேர்வு நடைபெற்றது. அப்போது எல்லோரும் கதை கேட்பார்கள். நன்றாக இருக்கிறது என்பார்கள். கதாநாயகன் நான்தான் என்றதும் யோசித்து சொல்கிறேன் என்று சென்று விடுவார்கள். இப்படி 50 பேருக்கு பிறகு நமீதா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் என்னுடன் நாயகியாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார், அவருக்கு மிக்க நன்றி. மேலும், இப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இயக்குனர் ஷெரிஃப் பேசும்போது, நான் வடசென்னையில் பிறந்து வளர்ந்தவன். சிறுவயதில் வறுமையின் காரணமாக குழந்தை தொழிலாளியாக இருந்திருக்கிறேன். நிறைய கலைகளை கற்றுக்கொண்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி இருக்கிறேன். அதிகமாக கோவிலுக்கு பறை வாசிக்க செல்வேன். நாங்கள் எப்போதும் குழுவுடன் சேர்ந்து தான் செய்வோம். ரூ.2,000/-, ரூ.3,000/-இப்படித்தான் வருமானம் வரும். அந்த பணத்தை வைத்து தான் படிப்பு, மற்ற விஷயங்களை கற்றுக் கொள்வேன். எனக்கு எப்போதும் பிரபஞ்சத்தின் மீது மிகவும் நம்பிக்கை உண்டு. நான் பல கோயில்களில் பறை வாசித்திருக்கிறேன். 200 கோயில்களை கட்டிய ஸ்தபதி இந்த படத்தின் தயாரிப்பாளராக வந்துள்ளதே அதற்கு சாட்சி. இந்த படத்தின் முதல் பாதியை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் இந்த படத்தை நான் கண்டிப்பாக எடுக்கிறோம் என்று கூறினார். உடனே டெல்லியில் இருந்த பாலாவை தொடர்பு கொண்டு இந்த படத்தை பற்றி பேசினேன். வெறும் 5 மணி நேரங்களிலேயே இந்த கதை படமாவது உறுதியாக விட்டது. சுமார் 16 வருடங்களுக்கு முன்பு அப்பு அண்ணா மற்றும் அவருடைய அண்ணா இருவரும் பத்திரிக்கை ஒன்றை தொடங்கினார்கள். அதற்கான விளம்பரத்திற்காக ரூ. 400/- க்கு நான் வரை வாசிக்க சென்றேன். இப்போது என்னுடைய படத்திலேயே அண்ணா கலையை கிணறாக பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உதய் அண்ணா தான் என்னுடைய சக்தியை. அவர் எல்லா வேலைகளையும் பார்ப்பார். மதன் என்னுடைய நண்பன் அவன் அங்கீகரிக்கப்பட வேண்டிய கலைஞன் அவனுக்காக இந்த படத்தில் நான் ஒன்று செய்திருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன் ஏனென்றால், நான் சிறு வயதில் சந்தித்த நபர்களுடைய கதை. பாலாவை பற்றி பலரும் நிறைய பேசியிருக்கிறார்கள். யாரும் பேசாத, யாருக்கும் தெரியாத சில விஷயங்களை நான் இங்கு சொல்கிறேன். பாலா உதவி செய்யும் போது மற்றவர்கள் கொடுக்கிறார்கள், பாலா உதவி செய்கிறான் என்று சொல்வார்கள். ஆனால், அப்படி அல்ல. பாலாவிற்கு வரும் வருமானத்திலிருந்து 90% உதவி செய்கிறான். அவனுக்கென்று எதுவும் செய்து கொள்வதில்லை. அவனுக்கென்று தனியாக வீடு கூட இல்லை. அண்ணனுடன் தான் தங்கி இருக்கிறான். இப்பொழுது தான் சிறிய கார், அதிலும் செகண்ட் ஹேண்ட் கார் தான் வாங்கி இருக்கிறேன். பாலா, உனக்கென்று சில விஷயங்களை நீ செய்து கொள்ள வேண்டும். மேலும் முதன்முதலாக ஒரு குழந்தைக்கு உதவ தான் பாலாவிற்கு நான் போன் செய்தேன் அப்படித்தான் பாலா எனக்கு அறிமுகம் அதன் பிறகு இந்த கதையை நான் கூறினேன் என்னை வைத்து எல்லாம் படம் எடுப்பீர்களா என்று கேட்டான். நான் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொன்னேன். அதன்படி இன்று எடுத்து விட்டேன். பாலாவின் முதல் படத்தை இயக்கியவர் ஷெரிஃப் என்று சொல்லும் படியாக அவன் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறான், அதற்கு அவனுக்கு நன்றி. அதற்கு பதிலாக நானும் அவனுக்கு ஒரு நல்ல படம் கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த படத்திற்காக அவன் கடுமையாக உழைத்திருக்கிறான். பாலாவை தேர்வு செய்தவுடன் என்னிடம் பலரும் இவன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறான் கேமராவிற்கு பொருந்துவானா என்று நேரடியாகவே கேட்டார்கள். அதற்காக மிகவும் கஷ்டப்பட்டு 25 கிலோ எடை கூடியிருக்கிறான். 50 நாயகிகள் இந்த படத்தை தவிர்த்து இருக்கிறார்கள். 51வதாக நமீதா இந்த கதையை புரிந்து கொண்டு ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். 50 பேரும் இந்த படத்தை ஒதுக்கியதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம் அது பற்றி நாம் விமர்சிக்க வேண்டாம். அர்ச்சனா அம்மா நடிப்பிற்கென்றே பிறந்தவர். அவரை இயக்கியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பாலாஜி சக்திவேல் அண்ணாவின் வழக்கு எண் படத்தை அகஸ்தியா திரையரங்கில் பார்த்தேன். எப்புட்றா!! என்பது போல இருந்தது. அந்தப் படத்தைப் பற்றி நிறைய பாராட்டி பத்திரிகைகளில் எழுதினார்கள். அந்த படங்களை பார்த்து தான் வளர்ந்தோம். தேசிய விருது பெற்ற இருவரை இயக்கியிருக்கிறேன், இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு? தீரன் அதிகாரம் ஒன்று நந்தீஸ்வரன் என்று பெயர் எடுத்தது போல காந்தி கண்ணாடி என்றும் இவருக்கு நிச்சயம் பெயர் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு படத்தின் வேலைகள் இருப்பதால் இன்று அவரால் வர இயலவில்லை. இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் இருவரின் பின்னணி இசையைப் பற்றி படம் வந்த பிறகு அனைவரும் பேசுவார்கள். இந்த படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினரும் என்னுடைய கனவை அவர்களுடைய கனவாக நினைத்து இரவும் பகலும் பாராமல் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய முதல் படத்தை போலவே இந்த படத்தையும் வெற்றிபடமாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.