ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி – முதல்வர் பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்ததூர், செப்- 11: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தை யா சட்டமன்றத் தொடரில், புதிய அரசு கலை கல்லூரி அமைத்து தர வேண்டும் என முதல்வரி டம் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் திருவண்ணாமலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி 7  மாவட்டங்களில் கலைக் கல்லூரிகள் புதிதாக துவ ங்கப்படும் எனவும்் அதன் ஒரு பகுதியாக  ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய அரசு கலைக் கல்லூரிகள்  தொடங்கப்படும் எனவும் அறிவித்தார். ஸ்ரீவில்லி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசுக் கல்லூரி அமைக்கப்படும் என்ற முதல்வர் பழனிசாமியின் அறிவிப் பை தொடர்ந்து ஸ்ரீவில்லி பஸ் நிலையம் முன்பு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தலைமை வகித்து பொதுமக்களுக்கும் பஸ் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார். வெடி வெடித்து கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நில வள வங்கித் தலைவர் முத்தையா வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிந்துமுருகன்் கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். எம். பாலசுப்பிரமணியம், பொருளாளர் கருமாரி முருகன், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் நடராஜன், அங்குராஜ், கந்தசாமி, சரவணமுனி, அத்திகுளம் கூட்டுறவு வங்கி துணைத் தலை வர் மணி, வன்னியராஜ், சுப்பிரமணியன், குலாலர் தெரு ரெங்கராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் மணிகண்டபிரபு, பிச்சைராஜ், கூமாப்பட்டி ஒன்றிய செயலா ளர் சேதுராமன் மகாராஜபுரம் கண்ணன், ராஜா மற் றும் அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் சட்டமன்ற உறுப்பி னர் சந்திரபிரபா முத்தையா கூறுகையில் ஸ்ரீவில்லி தொகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக தமிழக அரசு நிறைவே ற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்பொழுது நமது தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைத்திட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணை பிறப்பித்துள்ளார். அவருக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்; இதற்கு பரிந்துரை செய்த மாவட்ட பொறுப்பாளரும் தமிழக பால்வளத்துறை அமைச்ருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோருக்கு தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான அரசுகக் கலைக்கல்லூரி அமைய உறுதுணையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையாவிற்கு முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், நகரில் அனைத்து அமைப்புக்கள், தன்னார்வ நிறுவனங்கள், பொதுமக்கள், வியாபாரிகள் சங்கம், பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவ, மாணவியர் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.