3 மில்லியன் தொட்ட ’அண்ணாத்த சேதி’ சாதனை

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’துக்ளக் தர்பார்.’ அதிதி ராவ், பார்த்திபன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திலிருந்து அண்ணாத்த சேதி என்ற பாடல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியானது. தற்போது அந்தப் பாடல் மூன்று நாட்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படத்துள்ளது.