சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியின் காட்சி வழித் தகவல் தொடர்பியல்துறை மாணவர்கள் ஏற்பாட்டில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் ‘நம்மசென்னை‘ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபற்றது. கண்காட்சியில், சென்னை மாநகரத்தில் உள்ள பழமையான சிகப்பு வண்ணக் கட்டிடங்கள், கோவில்கள், நினைவுச் சின்னங்கள் என 90க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின், பத்திரிக்கை தகவல் அலுவலகம் மற்றும்மத்திய மக்கள் தொடர்பகத்தின் தென்மண்டல கூடுதல் தலைமை இயக்குனர் திரு M அண்ணாதுரைதிறந்து வைத்து பார்வையிட்டு, மாணவர்களின் முயற்சியைப் பாராட்டினார். புகைப்படங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னணி வரலாறு இடம்பெற்றிருந்தது இதன் சிறப்பாகும். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் (பொ) வே.பிரகாஷ், துறைத் தலைவர் சி. ஜெபக்குமார், பேராசிரியர் ராஜீஆகியோர் கலந்து கொண்டனர் கண்காட்சியை பேராசிரியர் எம் தேவேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். திரளான மக்கள் ஆர்வமுடன்புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு செல்கின்றனர். இக்கண்காட்சி நாளை சனிக்கிழமை வரைபொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அரசு அருங்காட்சியகத்தில் ‘நம்ம சென்னை’ புகைப்படக் கண்காட்சி
