தர்ஷன் பிலிம்ஸ் ஜோதி சிவா தயாரிப்பில். சிவா ஆறுமுகம் இயக்கத்தில் தேவயானி, விஜித், கண்மணி, ஜி.வி.அஹானா அஸ்னி (3 வயது குழந்தை), நிஹாரிகா (5வயது குழந்தை). ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன் சிவா, அக்ஷாரா, கவிதா ரவி, மனோஜ் குமார், பர்வீன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “நிழற்குடை”. விஜித்தும் கண்மணியும் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் இருவரின் பெற்றோர்களும் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறாரள். இருவரும் சென்னைக்கு வந்து இருவேறு கம்பெனிகளில் தனித்தனியாக வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையை வளர்க்க, இலங்கை இனக்கலவரத்தில் தாய், தந்தை, கணவன், குழந்தை ஆகிய அனைவரையும் இழந்து தன்னந் தனியாக தமிழகத்திற்கு வந்த தேவயாணியை நியமிக்கிறார்கள். குடும்ப உறவுகளை இழந்த தேவயாணிக்கு இப்போது விஜித், கண்மணி, குழந்தை அஹானா ஆகிய மூவரையும் தனது உறவுகளாக நினைத்து அந்த குடும்பத்தை கவனித்து வருகிறார். குழந்தை அஹானாவை தன் குழந்தைபோல் நினைத்து அதிக பாசமாக வளர்த்து வருகிறார். குழந்தைக்கு 5 வயதானவுடன் விஜித்துக்கும் கண்மணிக்கும் அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது. இருவரும் குழந்தையுடன் அமெரிக்கா செல்ல முடிவு செய்கிறார்கள். குழந்தையை விட்டுப்பிரிய மனமில்லாமல் தேவயாணி துக்கத்தில் துடியாய் துடுக்கிறார். மறுநாள் காலையில் அமெரிக்கா செல்லவிருக்கும் நிலையில் இரவே குழந்தையை கடத்தி விடுகிறார்கள். இவர்கள் அமெரிக்கா செல்ல விரும்பாத தேவயாணி உள்பட அனைவர் மீதும் காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார் விஜித். அனைவரையும் விசாரிக்கும் காவல்த்துறை ஆய்வாளர் இளவரசு,புகாரில் கூறப்பட்ட ஒருவரும் குழந்தையை கடத்தவில்லை என்று தெரியவருகிறது. அப்படியானால் குழந்தையை கடத்தியது யார்?. எதற்காக குழந்தை கடத்தப்படுகிறது? குழந்தை மீட்கப்பட்டதா?. என்பதுதான் கதை. இப்படத்தில் தேவயாணி தனது உச்சபட்ச உணர்வுகளை கொட்டி நடித்துள்ளார். பிரிந்து செல்லும் உறவுகளின் வேதனையையும் அதை வெளிக்காட்டாமல் நெஞ்சில் குமுறுகின்ற கொந்தளிப்பையும் தேவயாணியின் முகத்தில் கண்கூடாக காணமுடிகிறது. சலிப்புத்தட்டாத ஒரு பாடசாலையை திரைக்கதையாக தந்துள்ளார் இயக்குநர் சிவா ஆறுமுகம். இயக்குநரின் சிந்தனைக்கு உயிர் கொடுத்துள்ளார் வசனகர்த்தா ஹிமேஷ் பாலா. காவல்த்துறை ஆய்வாளரின் விசாரணைக்கு கனகச்சிதமாக பொறுந்தி தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இளவரசு. பிள்ளைப் பாசத்திற்கு ஒரு உருவமாக வடிவுக்கரசியின் உருவத்தை பார்க்க முடிகிறது. இக்காலத்தில் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்ற காரணத்தை எளிதாக திரையில் விளக்கிய இயக்குநர் பாராட்டுதலுக்குறியவர். அனைவரும் தன் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய அல்லது படிக்க வேண்டிய பாடசாலைதான் “நிழற்குடை”.
“நிழற்குடை” திரைப்பட விமர்சனம்
