பிரபல நடிகர் மோகனின் பிறந்த நாளை சென்னை பரணிபுதூர் ரொஹாபாத் பெண்கள் மனநலம் பாதுகாப்பு இல்லத்தில் உதவிகள் வழங்கி அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. பின்பு ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு மோர், பிரியாணி வழங்கப்பட்டன. இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் நடிகர் மோகன் நேரில் வருகை தந்து தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். நிகழ்வில் சேலம் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் ஆர்.தமிழ்ச்செல்வன், முன்னால் தமிழக அரசவை கவிஞரும் மோகனுக்கு வெற்றிப் பாடல்களை எழுதிய கவிஞர் முத்துலிங்கம் மற்றும் ரசிகர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நடிகர் iமோகன் ரசிகர் குழுமத்தினர் செய்து இருந்தனர்…
மனநலம் பாதுகாப்பு இல்லத்தில் உதவிகள் வழங்கிய நடிகர் மோகன்
