சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, திருநெல்வேலி சரகஅதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்13.05.2025 தேதி காலை 11.30 மணியளவில் உதவி ஆய்வாளர்திரு.ராஜேஷ் தலைமையில் குழுவினர் திருநெல்வேலி தூத்துக்குடிதேசிய நெடுஞ்சாலையில் ரோந்து செய்து கண்காணித்துவந்தபோது வடவல்லநாட்டில் உள்ள அரசன் சேம்பர்ஸ் அருகேநின்று கொண்டிருந்த நீல நிறமுடைய TN-69 BS 5847 Suzuki Alto K.10 என்ற காரை சோதனை செய்துள்ளனர்.அந்த காரில் இருந்த நான்கு நபர்களை சந்தேகத்தின்அடிப்படையில் சோதனை செய்ததில் காரில் இருந்த விக்னேஷ்என்ற நபர் வைத்திருந்த கோணி பையில் 2 அடி உயரமுள்ளஉலோக அம்மன் சிலை இருப்பது தெரிய வந்ததது. மேலும்விக்னேஷை விசாரணை செய்ததில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு(1)பிரதாப் (2)தங்கசதீஷ் மற்றும் (3) வெற்றிவேல் ஆகியோருடன் சேர்ந்து தூத்துக்குடி நகர ஏ.ப்பி.சி. மகாலஷ்மிகல்லூரி அருகே அமைந்துள்ள கண்ணன் என்பவரது குடோனைஉடைத்து திறந்ததாக வாக்குமூலம் அளித்தார். மேலும் உலோககொள்கலனில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தையும் உடைத்துஅம்மன் சிலையை திருடி உள்ளனர்.
எனவே விசாரணை குழுவினர் உலோக சிலையையும்மேற்படி காரையும் கைப்பற்றி அதில் பயணித்த (1) பிரதாப் (30) த/பெசாமுவேல், ஒட்டபிடாரம் (2)தங்கசதிஷ் (26), ஒட்டபிடாரம் (3) விக்னேஷ் (26) த/பெ.ராதாகிருஷ்ணன், முப்பில்லிவெட்டி, ஒட்டப்பிடாரம் தாலுகா மற்றும் (4)வெற்றிவேல்(35)த/பெ.ராஜேந்திரன், முப்பில்லிவெட்டி, ஒட்டப்பிடாரம் தாலுகாஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காவல் உதவி ஆய்வாளர் கொடுத்த தனி அறிக்கையின்பேரில், 13.05.2025 23.45 மணிக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுகாவல் நிலைய குற்ற எண்.03/2025 ச/பி.331(4), 305(a), 317(2), 317(5), 61(2) of BNS-2023 and 35(1(a) of BNSS-2023 வழக்குபதிவு செய்யப்பட்டு, திருநெல்வேலி சரக காவல் ஆய்வாளர், திருமதி.வனிதாராணி, மேல் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
மேற்படி நான்கு எதிரிகளையும் 15.05.2025 அன்று காலைமதுரை, மாண்புமிகு தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர்அவர்கள் முன்பு ஆஜர்படுத்தி 21.05.2025 வரை நீதிமன்ற அடைப்புகாவலில் அடைக்க உத்தரவு பெறப்பட்டது. உத்தரவுப்படி நான்குஎதிரிகளையும் மாவட்ட சிறை, விருதுநகரில்அடைக்கப்பட்டடார்கள். மேற்படி சிலை எதிரிகளுக்கு எங்கிருந்துகிடைக்கப் பெற்றது என்பது பற்றி விசாரணை நடைப்பெற்றுவருகிறது.
திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல்துறை இயக்குநர்மற்றும் படைத்தலைவர், தமிழ்நாடு அவர்கள் சிலை கடத்தல்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் குழுவினரை வெகுவாகபாராட்டினார்.