08.07.2021 அன்று மதுரை மாநகர காவல் துறைக்குகஞ்சா கடத்துவது சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் படிகாவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை செய்து வந்தநிலையில் கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்டசிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே அந்த வழியாகவந்த TN 59 CK 3492 என்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான 28 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி அதைக்கடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் மேலராங்கியத்தைச்சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சரித்திர பதிவேடுகுற்றவாளியான முருகன் என்ற லோடு முருகன் வயது 42/2025, மதுரை அனுப்பானடி டிச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஜோதி பாசுஎன்பவரின் மகன் சரித்திர பதிவேடு குற்றவாளியானரவிக்குமார் என்ற தவளை ரவி வயது 32/2025 மதுரை அண்ணாநகரை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் சத்தியேந்திரன்வயது 32/2025 ஆகியோரை கைது செய்து கடத்தி வந்தகஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும்இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூ.10,000/- ஆகியவற்றையும்கைப்பற்றி வழக்கு பதிவு செய்து எதிரிகளை நீதிமன்றகாவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ் வழக்கில் சாட்சிகள்விசாரணை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்நிலையில் 28.05.2025 அன்று சாட்சிகள் விசாரணைமுடிவுற்று தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட போதை பொருள்தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. செங்கமல செல்வன்அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை கடத்திய எதிரிகளான முருகள் என்றலோடு முருகன் வயது 42/25 ரவிக்குமார் என்ற தவளை ரவி32/25 மற்றும் சத்தியேந்திரன் 32/25 ஆகியோர் மீதானகுற்றச்சாட்டுகள் சாட்சிகள் விசாரணையில் சந்தேகத்திற்குஇடம் இன்றி நிருபணம் ஆவதால் எதிரிகளை குற்றவாளிகள்என தீர்மானித்து எதிரிகளுக்கு தலா 10 வருட கடுங்காவல்சிறை தண்டனையும் தலா ரூபாய் 1,00,000/- அபராதமும்விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்கள்
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கீரைத்துறை காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள்வெகுவாக பாராட்டினார்கள்.