கலைஞரின் 102வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்

முத்தமிழறிஞர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுகழக சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு. கலைஞரை மனதில் கொள்வோம் புதியதோர் உலகு செய்வோம் என்னும் பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.