சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலிதயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களைகண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவனமான SGS IPR CONSULTANCY, New Delhi –யின் உதவி மேலாளர் திரு. M. தம்புசாமி என்பவர் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் முன்னணிநிறுவனமான ஏசியன் பெயிண்ட் பிராண்டுகளை போலபோலியான பெயிண்ட்களை தயாரித்து விற்பனை செய்வதுகுறித்து புகார் அளித்ததின் பேரில் சென்னை அறிவுசார்சொத்துரிமை அமலாக்கப் பிரிவினர் அய்யப்பன் தாங்கல்தண்டலம் பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையில்அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, ஆரோக்கியசாமிமற்றும் சரவணன் ஆகியோர் போலி தயாரிப்புகளை விற்பனைசெய்து வருவது கண்டறியப்பட்டது. விசாரணையில் மூவரும்விலை மலிவான போலியான பெயிண்டுகளை வாங்கி அதைமுன்னணி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தின்பெயர் கொண்ட பக்கெட்டில் அடைத்து விற்பனையில் ஈடுபட்டுவந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சென்னைஅறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினர் மேற்படி மூன்றுகுற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்துரூ.1,73,000/- மதிப்புள்ள போலி ஏசியன் பெயிண்ட்பக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.
முனைவர் அ. அமல்ராஜ், இ.கா.ப, கூடுதல் காவல்துறைஇயக்குனர், அமலாக்கப்பணியகம், முனைவர்பி.கே.செந்தில்குமாரி, இ.கா.ப, காவல்துறை தலைவர், குற்றம்மற்றும் திரு. இ.டி. சாம்சன், இ.கா.ப, காவல்கண்காணிப்பாளர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவுஆகியோர் சென்னை அறிவுசார் சொத்துரிமைஅமலாக்கப்பிரிவின் விரைவான நடவடிக்கைக்கு பாராட்டுதெரிவித்தனர். மேலும் போலி பொருட்களின் உற்பத்தி மற்றும்விற்பனை குறித்த தகவல்களை spiprec@gmail.comஎன்றமின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-28511587 என்றதொலைபேசி எண்ணிலோ தெரிவிக்குமாறு பொது மக்களைகேட்டுக்கொண்டனர்.