“மாரீசன்” திரைப்பட விமர்சனம்

ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில் சுதீஸ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், ப்.எல்.தேனப்பன், பைவ் ஸ்டார் கிருஷ்ணா, ஹரிதா முத்தரசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மாரீசன்”. படத்தின் ஆரம்பத்தில் வடிவேலுவை ஒரு பங்களாவில் கட்டி வைத்திருக்கிறார்கள். நியாபக மறதி நோயால் மனநிலம் பாதிக்க்ப்பட்டவர் போல் வடிவேலு தோற்றமளிக்கிறார். இந்நிலையில்  திருட்டு வழக்கில் சிறைக்கு சென்ற பகத் பாசில் விடுதலையாகி வெளியே வருகிறார். அவர் கொள்ளையடிக்க வடிவேலுவை கட்டிவைத்திருக்கும் பங்களாவுக்கு வருகிறார். கொள்ளையடிக்க வந்த பகத் பாசிலிடம் இந்த பங்களாவிலிருந்து என்னை தப்பிக்க வைத்தால் ரூ.25 ஆயிரம் தருவதாக சொல்கிறார் வடிவேலு. அதனால் பகத் பாசிலும் வடிவேலுவும் அந்த பங்களாவிலிருந்து தப்பிக்கிறர்கள். வடிவேலுவிடம் அதிகளவு பணமிருப்பதை தெரிந்து கொண்ட பகத் பாசில், அவரிடமிருக்கும் பணம் முழுவதையும் அபகரிக்க திட்டமிடுகிறார். அதனால் வடிவேலுவை தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு திருவண்ணமலைக்கு இருவரும் செல்கிறார்கள். வரும் வழியில் இரவு நேரங்களில் வடிவேலு, பகத் பாசிலுக்கு தெரியாமல் சிலபேர்களை கொலை செய்கிறார். வடிவேலு ஏன் கொலை செய்கிறார்?. வடிவேலு உண்மையில் யார்? வடிவேலுவுக்கும் பகத் பாசிலுக்கும் உள்ள தொடர்பு என்ன்? வடிவேலுவிடம் இருக்கும் பணத்தை பகத் பாசில் கொள்ளையடித்தாரா? என்பதுதான் கதை. வடிவேலும் பகத் சிங்கும் அருமையான நகைச்சுவை ஜோடிகளாக பிரதிபலிக்கிறார்கள். வடிவேலுவின் எதார்த்தமான நடிப்பால் நகைச்சுவையும், கொலைகாரனாக மாறும்போது அவரின் உடல்மொழியும் வித்தியாசமான வடிவேலுவாக திரையில் காணமுடிகிறது. நல்லவனாக நடித்துக்கொண்டே கொள்ளையடிக்க திட்டமிடும் பகத்பாசிலின் நடிப்பு தனித்திறமையுடம் பளிச்சிடுகிறது. மொத்தத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு நடிக்கிறார்கள். தராசின் இரு தட்டுகளும் சம்மாக நிற்பதுபோல் நடிப்பை நிலை நிறுத்துகிறார்கள். கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேனுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா ஆகிய அனைவரும் நடிப்பும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தங்களது தனிதிறமையுடன் நடித்திருப்பது திரைக்கதை ஓட்டத்தை நன்கு நகர்த்தி செல்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் திருப்பங்களுக்கு வலுசேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி, வ்டிவேலு பகத் பாசிலின் சாலைப் பயணத்தை காட்சிப்படுத்திருப்பது அருமையாக உள்ளது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களுக்கு சலிப்புதட்டாமல் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சுதீஷ் சங்கர் ஒரு மர்ம நாவலை நகைச்சுவையுடன் திரையில் காட்சிப்படுத்தியுள்ளார்.